நன்றி வல்லமை.com
நமது கிளினிக்கில் பிஸியான ஒரு மாலைப்பொழுது…
நர்ஸ் 30 ஈ அடித்திருந்தார். நான் ஈ
அடிப்பதா?? என் கௌரவம்
என்னாவரது. அதனால் கொசு அடித்துக் கொண்டிருந்தேன். 18…….19……
”வணக்கம் ஐயா”
ஐயாவா? சரி அரசியல் கட்சி ஆரம்பிச்சுட வேண்டியதான்.
”ஹிஹி வணக்கம், வணக்கம். வாங்க, வாங்க. உக்காருங்க. நீங்களும்
உக்காருங்க மேடம்”. தம்பி அல்கேட்சு. ரொம்ப கொழயாத. நீ
ஆளில்லாம கொசு அடிக்கிறது தெரிஞ்சிட போவுது.
“ஐயா, என்னோட பேரு சிக்குன சடை. நீங்கள் நலமா, உங்க
குடும்ப அண்பர்கள் நலமா? உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு?”ன்னார்.
”பரவாயில்ல சார்.
எனக்கு தான் அப்பப்போ லைட்டா முதுகு வலி வருது. கொஞசம் செரிமானமும் சரியில்ல”.
(டேய் அல்கேட்ஸ்! நம்மளை பேக்ஷண்ட் ஆக்கிட்டு அவரு டாக்டர் ஆகப்
பாக்குறாரு. சுதாரி...)
”க்கூம்.. என்ன
ப்ராப்ளம்?”ன்னேன்.
“ஐயா, எனக்கு பின் இடுப்புல வலி. பின்னாடிலேந்து முன்னாடி வருது”.
வரக் கூடாதே.....”எத்தன நாளா?”
“மூனு நாளுங்க”
கீழ் முதுகை அழுத்தி, “இங்க வலிக்குதா?”
“ஆஆ. ஆமாய்யா. நீங்க
அழுத்தும் போது அதிகமாவுது”.
”ஒகே. இந்த வலி
எங்கயாவது பரவுதா?”
”ஆமா. அப்படியே முன்னால
வந்து விரை வரையும் பரவுது”. (தயவு செஞ்சு படிக்கிறத
நிறுத்தாதீங்க. வல்காரிட்டி கிடையாது. இது பல பேருக்கு, உண்மையாக
இருக்கும் பிரச்சினை. பேக்ஷண்ட்ஸ் அப்படித் தான் சொல்லுவாங்க. வலி அவங்கவங்களுக்கு
வந்தா தானே தெரியும்).
அப்படியா, சரி தான்.
“ஒகே. உங்களுக்கு
கிட்னில கல்லு இருக்கு”.
அவர், வீட்டுக்காரங்களைப் பாத்து, “பாத்தியாடி. பக்கத்து வீட்டுல, இவரை சொப்ப
மருத்துவர்ன்னு சொன்னாங்களே. கரெக்டா கண்டுபுடிச்சிட்டாரு பாரு” ன்னார், என்னிடம், “மிகச்
சரியாக கண்டு புடிச்சிட்டீங்க மருத்துவரே”.
“ஒ. அப்ப இது முன்னாடியே
தெரியுமா?”
“இதுக்கு முன்னாடி,
3 சிறுநீர் குழாய் மருத்துவர்களோட கருத்தும் இதே தானய்யா”
”3 யூராலஜிஸ்ட்டா? அப்போ
இந்த ப்ராப்ளம் ரொம்ப நாளா இருக்கா?”
“4 வருக்ஷமாக ஐயா”.
இதுல ’ஐயா’ வேற. ஓ. அவரா இவரு???
தமிழ் சகளை!! வியாதிய புதுசா கண்டுபிடிச்சு பேர் வாங்கலாம்னா,
நம்ம கரெக்டா கண்டுபிடிக்கிறோமான்னு டெஸ்டிங் பண்றாரே. இன்னிக்கு
அம்பது ருவா கொடுக்குறத்துக்கு ஒரு மணி நேரம் பில்டப் போட்டு பேசப் போறார்,
சரி கடமைய செய்வோம்.
“ஒகேங்க சார். நாலு
வருக்ஷமா கிட்னில கல்லு. என்ன ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கீங்க?”
“மொதல்ல, சின்ன வாளி ஊர்ல, மருத்துவர் நரிமூலத்துக்கிட்ட
பாத்தேன். அவர் தான் சிறுநீரகக் கல்னு கண்டுபுடிச்சார், அவரு
மாத்திரையும் தண்ணி மருந்தும் குடுத்தார். தக்காளிய வெதய நீக்குன பின்னாடி தான்
சாப்பிடணும்னார்”
“ஈஙு. நரிமூலமா?
சின்ன வாளி டவுன்ல பெரிய யூராலஜிஸ்ட் ஆச்சே”.
”ஆமா, ஆனா அவரு மருந்து கொடுத்து சரியாவல. அப்புறம் மருத்துவர் சின்னத்தூள்
கிட்ட காமிச்சேன். அவரு, 5 பாட்டில் உப்புத்தண்ணி (ஸலைன்)
ஏத்தி, வேகமா ஒன்னுக்கு வர ஊசி போட்டார். முட்டிக்கிட்டு
சிறுநீர் கழிச்சா கல்லு அடிச்சிக்கிட்டு வெளியேறும்னாரு, வெளியேறல.
அப்புறம் மாத்திரையும், தண்ணி மருந்தும் கொடுத்தார்.”
“கரெக்ட். ஸலைன்
ட்ரீட்மெண்ட். அதான் அடுத்த ஸ்டெப். திரும்ப அவருக்கிட்ட போனீங்களா?”
“இல்லய்யா, சரியாவலயே! அதனால மாத்திட்டேன். அப்புறம் மதிப்பிற்குறிய, மருத்துவர் வெட்டி சிலந்திய பாத்தேன்.”
“ஈஙு. சிலந்தியா?
அய்யோ, அவரு தமிழ்நாட்லயே ஃபேமஸ் யூராலஜிஸ்ட்
ஆச்சே”. இவரு எதுக்கு என்க்கிட்ட வந்துருக்கார்? வீட்ல பொழுது போகலன்னு பேச வந்திருக்காரா?
”சிறுநீரகக் கல்லு
பெருசா இருக்கு, மருந்துல கரையாது”ன்னார்.
”ஆமா. 5 மில்லிமீட்டர்
சைஸ் கல்லு தான் மருந்தில கரையும். அதுக்கு மேல இருந்தா கரையாது”
”ஆமா. அதுக்கு ஒரு
வைத்தியம் பண்ணனும்னார்”.
”என்ன வைத்தியம்?”
அவர், வீட்டுக்காரங்கள மொறச்சார். “துணைவி வெளுத்த தேங்காய், அந்த வைத்தியத்த சொல்லு”
அவங்க, “லித்தோட்ரிப்ஸி பண்ணனும்னு சொன்னார் சார்.
லித்தோட்ரிப்ஸிக்கு தமிழ் கெடயாது பாருங்க. அதான் என்னைச் சொல்ல சொன்னார்”.
சரி தான், ஐயாவுக்கு மொழிப்
பற்று முத்திப்போச்சு போல.
அவர், ”நன்றி துணைவி. ஆனா அப்போ பணம் இல்லாததினால,
முடியாதுய்யானேன். அப்புறம் மாத்திரையும் தண்ணி மருந்தும் எழுதிக்
கொடுத்தார்.”
அலுப்புடன், ”வேற என்ன சொன்னார்?”னேன்.
“பால் சாப்பிடாதீங்க,
சுண்ணாம்புச் சத்து சேந்தா கல்லு பெரிசாயிடும், அதனால தேநீரும், கொட்டை வடிநீரும் குடிக்கச்
சொன்னார். அடப்போங்கையா! தமிழ் கோட்பாடுல, அதெல்லாம்
அந்நியரோடது. நான் சாப்பிடுறதே பால், சோறு, காய்கறிகளின்னால சமையல், கவுச்சி, முட்டை தான். அந்நிய பொருளை தொடுறது இல்ல. நாம என்ன அவன்களுக்கு அடிமையா?”ன்னு சூடாயிட்டார்.
ஆமா, இதெல்லாம் பேசுங்க. வைத்தியத்துக்கு மட்டும்
இங்கிலீக்ஷ் டாக்டர்ட்ட வந்து, வெள்ளக்காரன் கண்டுபுடிச்ச
மாத்திரையா முழுங்குங்க. அய்யோ, இன்னிக்குப் பாத்து ஆறு பேர்
வந்துருக்காங்களே. முந்நூறு ருவா. சீக்கிரம் முடிடா அல்.
”சரி சார், ஆறு மில்லிமீட்டர் கல்லுனு பழைய ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லுது. அதுவும்
கிட்னில இல்ல. யூரேட்டர்ல இருக்கு. அதாவது கிட்னிலேந்து நீர் வெளியேருற குழாய்ல
சிக்கி இருக்கு. அதான் வலி பரவுது. லித்தோட்ரிப்ஸி தான் கடைசி ஆப்க்ஷன்”
”அப்படியா மருத்துவர்
அவர்களே!”
பேரு கெட்டாலும் பரவால்ல, இவர அடிடா அல்கேட்சு,
ஏதோ கட்சி மீட்டிங் மாதிரி பேசுறாரு.
“ஆமா சார். வேற
வழியில்ல. கல்லு பெரிசாயிடிச்சி. எறங்கிடிச்சி வேற. இன்னும் எறங்குச்சுனா வலி
ஜாஸ்தியாயிடும், யூரின்ல ப்ளட் கூட வரலாம்”
“நானும் பாத்து பாத்து
அலுத்துட்டேன் ஐயா. அந்த சிகிச்சை பண்ணிக்குறேன்”.
”ரைட்”. நான் ஃபோனை டயல் பண்ணி, நம்ம சிட்டில பெரியாளான
ஈஙு.யானை முடிக்கு பேசினேன், “சார், குட்
ஈவினிங் சார், நான் அல்கேட்ஸ் பேசுறேன். நம்ம வண்டிய
நாளைக்கு சாயங்காலம், ஒரு ஆறரை மணிக்கு அணுப்பிடுங்க. ஆமா
சார். எறங்கிடிச்சி, 6 மில்லிமீட்டர். உடைக்கணும். வண்டி
சர்வீஸ் ஆயிடிச்சில்ல? ஒகே சார். அனுப்பிடுங்க”ன்னேன்.
சிக்குன சடை பேயறஞ்ச மாதிரி
ஆயிட்டார். “என்ன
வண்டி சார்?”
”சாரா? நான், ’ஐயா’வாக்கும். நாளைக்கு
ஆறரைக்கு உங்க கல்லை ஒடைக்கிறோம். கத்தியில்லாம, ரத்தமில்லாம,
வலி இல்லாம. 20,000 கொண்டாந்திடுங்க”.
பயத்துடன், “அப்படியா, சரிங்கையா”
“தம்பி, பாத்து ரிவர்ஸ் எடு. சாக்கடைல வுட்றப் போற”ன்னு
மெடிக்கல க்ஷாப் ஒனர் வண்டிய கைடு பண்ணினார்.
நான், “மிஸ்டர் சிக்குன சடை, தமிழய்யா,
இங்க வாங்க”
அவர் நடுங்கிக் கொண்டே வந்தார். “குட் ஈவினிங் சார்,
என்ன பெரிய பஸ் ஒன்னு வந்திருக்கு?”
“சார். லித்தோட்ரிப்ஸி
ஒரு கோடி ருபா மிக்ஷின். எல்லாராலையும் வாங்க முடியாது. பேக்ஷண்ட்ஸ் அங்க ஒன்னு
இங்கொன்னுன்னு தான் இருப்பாங்க. ஈஙு. யானை முடி, ஒரு ஐடியா
பண்ணி, லோன் போட்டு, இந்த மெக்ஷினை
வாங்கி, ஒரு பஸ்சுக்குள்ள அடைச்சிட்டார். இதுக்காக ஒரு
பில்டிங் கட்ட வேணாம் பாருங்க. எங்க வேணுன்னாலும் எடுத்துக் கிட்டு போலாம். நம்மள
மாதிரி, சிட்டிக்கு வெளியே இருக்குற இடத்துக்கும் போய் ஈஸியா
கல்லு உடைக்கலாம். இது புடிக்கலைன்னா, நீங்க 15 கிலோ மீட்டர்
போய், அழி ரப்பர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிடுங்க. நாலு நாள்
அட்மிக்ஷன், டோட்டலா 60,000 வரும். என்ன இங்க பண்ணலாமா?
இல்ல அழி ரப்பருக்கு போறீங்களா?”
அவர் கன்வின்ஸ் ஆகி, பஸ் கிட்ட போனார்.
“கல் ஒடைக்கிறதுல்லாம்
ஏறு”. அடப்பாவி, மெக்ஷின்
டெக்னீக்ஷியன், கண்டக்டர் லெவலுக்கு கூவறானே!!
“தம்பி, எனக்கு கல்லு ஒடைக்கணும்”.
“டிக்கட், ச்சி, டாக்டரோட சீட்டு இருக்கா?”ன்னான்.
“இங்க பாரு, ஈஙு.அல்கேட்ஸ் சீட்டு”
”சரி, உள்ள ஏறிப் படுங்க”
உள்ளே…
“சார். அந்த பெட்ல
இருக்குற வளையத்துல இடுப்ப வச்சிப் படுங்க, அதுல போய் தலை
வச்சிப்படுத்துருக்கீங்க? அப்புறம் மூளைக் கல்லு தான்
உடையும். ஹாஹாஹா”
“சரி தம்பி”
ட்ரிங்க் டிக்டிக்டிக், ட்ரிங்க்
டிக்டிக்டிக், ட்ரிங்க் டிக்டிக்டிக்
“ஒகே சார், நீங்க போவலாம்”
அவர் என்னிடம் வந்து, “சார், கல்ல ஒடைச்சாச்சா, எனக்கு ஒன்னும் தெரியலயியே”
“இப்ப தெரியாது. நாளைக்கு,
கல்லு பொடிப்பொடியா வெளியே வரும்”
“எப்படி?”
“சார், உங்களுக்கு என்ன தொண்டைலயா கல்லு? சிவலிங்கம் மாதிரி
வாயிலேந்து வர… கிட்னிக் கல்லு சார். இத்தன நேரம் அது
அல்ட்ரா சவுண்ட் வேவ்ல பொடியாகியிருக்கும். கொஞ்சம் கொஞ்சமா யூரின்ல ஃபுல்லா
வெளியேரும்”.
“அப்படியா அய்யா,
மிக்க நன்றி”
ஐயா திரும்ப வந்திடிச்சா? பிரச்சினை இல்லாதப்போ
இப்படி பேசுறாரு. சொந்தமா ஒரு பிரச்சினைனோனையும், கொள்கையெல்லாம்
காத்துல பறந்துடுது. பிரச்சினை போன உடனே, பழய புத்தி உடனே
வந்திடுதே.
“சரி, சிஸ்டர் வெளிய இருக்காங்க. 20,000 குடுத்துட்டு கெளம்புங்க. ஆல் தி பெஸ்ட்”
“சரி ஐயா”ன்னு போயிட்டாங்க.
ஈஙு. யானைமுடிக் கிட்ட சொல்லி, “கிட்னிக் கல்:
புதைந்திருக்கும் பொக்கிக்ஷம்” புக்க வாங்கித் தர சொல்லணும்.
இவ்ளோ பேக்ஷண்ட் அனுப்பி இருக்கேனே.
“சார், சார் சார்”, அந்த டெக்னீக்ஷியன் ஒடி வந்தார்.
“என்னயா?”
“சார், அவருக்கு பண்ணும் போது மிக்ஷின் ரிப்பேர் ஆகி, ஃப்ரீக்குவென்ஸி
ஜாஸ்தியாயிடிச்சி. சுத்தி உள்ள சில கல்லும் ஒடஞ்சிருக்கும்”.
நான் சுத்திமுத்திப் பாத்தேன், “அடப்பாவி, என் மார்பிள் புள்ளையார் எங்கயா?”
அவன் மேஜை மேலிருந்த மண்ணைக்காட்டி, “தோ இருக்கு சார்”ன்னான்.
அடுத்த நாள், தமிழய்யா, சிக்குன சடை வந்திருந்தார்.
“வாங்க, உக்காருங்க, இப்ப எப்படி இருக்கு?”
“சார். நான் ஜெம்ஸ்
அண்ட் ஜீவல்சில், ஜாதகத்தை குடுத்து, சஃபையர்
மோதிரம் வாங்கினேன். இப்போ மோதிரம் இருக்கு, சஃபையரைக் காணல”.
என்ன பண்றது, சரி சமாளிப்போம்.
நான், “ஐயா, சஃபையர் என்பது நம்மை
பன்நெடுங்காலமாக, பரங்கியர் நம்மை அடிமைப்படுத்த உண்டாக்கிய
சொல். வைர, வைடூரியம், மரகதப் பச்சை
இருக்கும் போது, உமக்கு ஏனையா ஆங்கில சஃபையர் மோகம்?”ன்னு ஒரு போடு போட்டேன்.
சட்டுனு சுதாரிச்சு, “ஆம் ஐயா.
இருந்தாலும், அது விலை அதிகமாச்சே?”
“ஐயா, நீங்கள் ’தமிழ் தமிழ்’ என
கூறுகிறீர்கள், ஆனால் தங்கள் மனதின் அடியாழத்தில் ஆங்கில
மனோபாவம் புதைந்திருக்கிறது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”
”அது வந்து, கல்லு வெல ஜாஸ்தி…..”
“சபையர். அதாவது
போட்டுக் கொள்பவரை, ’சப்பை’ யர் ஆக்கி
விடுகிறது”. மேலே பாத்து, “அம்மா மாரி,
என்று தான் நீ உண்மையான தமிழனுக்கு நல்வழிக் காட்டப் போகிறாயோ?”
“அது வந்து….”னு அவர் அப்படியே போயிட்டார். நான் வேர்வையை துடைத்துக் கொண்டேன்.
3 வருக்ஷம் கழிச்சு….
“ஈஙு. யானைமுடி சார்.
ஈஙு. அல்கேட்ஸ் பேசறேன். எனக்கு கிட்னில கல்லு. 7மிமீ, ஒடைக்கணும்”.
“அட நீங்க எவ்ளோ பேர்
அனுப்பிருக்கீங்க. உங்களுக்கு ஃபீஸ் கம்மி தான்”
“தாங்க்ஸ் சார்”
“அக்கவுண்ட்
ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ல, 43,000 ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க. லாரி,
ச்சீ, எக்யூப்மெண்ட் வீடு தேடி வரும்”.
“சார், அல்மோஸ்ட் 30 பேக்ஷண்ட் அனுப்பியிருக்கேன், 43,000மா?”
“புரியாம பேசாதீங்க
அல்கேட்ஸ். விலை வாசி, டீசல் வெல ஏறிப்போச்சு. அழி ரப்பர்
ஹாஸ்ப்பிட்டல் போய்ப் பாருங்க, 1,40,000 ஆகும். எப்படி வசதி?”
“வண்டிய அனுப்புங்க
சார்”
டெக்னீக்ஷியன், “சார், ஃப்ரிக்குவென்சி கம்மியாயிடிச்சி, கல்லு
ஒடஞ்சிருக்காது”
“யோவ். கல்ல ஒடைக்கல,
ஒன்ன ஜெயில்ல களி திங்க வெச்சுருவேன். சொளையா 43,000
கொடுத்திருக்கேன். ஒட மொதல்ல”
ட்ரிங்க் டிக் ட்ரிங்க் டிக்
ட்ரிங்ங்ங்ங்….. டகடும் டகடும் கொய்ங்ங்ங்…
டகடும் கொய்ங்கா? வித்தியாசமா இருக்கு?
“சார், உங்க வீட்டை ஒடச்சிட்டோம். ஸாரி”
ஒருத்தர் வந்தாரு, ”வணக்கம் சார்”
“வாங்க ஒக்காருங்க”
னேன். சோகமாக, வீடு போச்சே….
“சார், நான் முன்னாடி வைர யாவாரம் பாத்துக்கிட்டுருந்தேன். அப்புறம் ஒரு
கன்ஸைன்மெண்ட்டுல தண்ணி பூந்த வைரமா அனுப்பிட்டாங்க. நொடிச்சு போச்சு. இப்ப தான்
பழைய லாரி வாங்கி ஜல்லி லோடு அடிக்கிறேன்”.
இவரு பேக்ஷண்ட் இல்லயா, “ஒகே”
“நேத்திக்கு உங்க
வீட்டு முன்னாடி ஒரு வண்டியப் பாத்தேன். ஏதோ கல்லு உடைக்கிறதுனு பேசிக்கிட்டாங்க.
சார். அதான் நம்ம ஒரு பிஸினஸ் பேசலாம்னு வந்தேன். நம்மக் கிட்ட பாறை 8 டன்
இருக்கு. அத 6ஙிஙி க்கு ஒடைக்க எவ்ளோ ஆகும்”
”ஹலோ ஒரு கல்லு உடைக்க
43,000 ருவா”
அவரு அதிர்ச்சியாகி, “அப்படி என்ன கல்லு
சார்?”
”கிட்னிக் கல்லு.
உடம்புல கிட்னிக் கல்லு, பித்தப் பை கல்லுனு நெறய இருக்கு.
இங்க பாருங்க”ன்னு என் கிட்ட இருந்த சில பித்தப் பை கல்லைக்
காட்டினேன். ”நீங்களே வெச்சுக்குங்க”.
5 வருக்ஷம் கழிச்சு,
கிளினிக் வாசலில் ஒரு பி.எம்.டபிள்யு
கார் வந்துது.
பார்றா. நம்ம கைராசிக்கு பெரிய
ஆளுங்கல்லாம் வராங்க….
ஒருத்தர் அப்படியே பளபளன்னு வராரு.
அப்படியே தகதகங்குது.
“வணக்கம் சார், உக்காருங்க”ன்னேன்.
“சார் என்ன தெரியலியா,
நான் தான் ஜல்லி லாரி டிரைவர்”
“யாரு……..?”
“நீங்க அன்னிக்கு கல்லு
கொடுத்தீங்கல்ல? அதக் கொண்டு போய் ஒரு சேட்டு கிட்ட
காட்டினேன். அவரு இது என்னா பளபளன்னு இருக்கு. பல க்ஷேப்லையும் இருக்குன்னு
பாத்தார். யானை, கூஜா, மான் கொம்பு
மாதிரி. அப்புறம் கண்டு புடிச்சேன். இது முத்து மாதிரி. உடம்புக்குள்ளே இருந்துட்டு
இருக்கிற முத்து. அப்புறம் எல்லா ஆஸ்பத்திரிக்கும் போயி அங்க கிட்னிக் கல்லு,
பித்தப்பைக் கல்லு ஆபரேக்ஷன் நடக்கும் போது கல்லை
வாங்கியாந்துடுவேன். இப்போ லண்டன்ல இருக்குற, இண்டர்நேக்ஷனல்
ரேர் ஸ்டோன்ஸ் மியூசியத்துல கூட நம்ம கல்லு நாலு இருக்கு. ஸ்டோன் கலெக்ட்டர்ஸ்
நல்ல ரேட்டு குடுத்து வாங்கிப்பாங்க. நம்ம ஹெட் ஆபிஸ் ஜுரிச்ல. எல்லாம்
உங்கள்ட்டேந்து ஆரம்பிச்சது. புது வீடு கட்டியாச்சா? வரேன்
சார்”.
வாழ்த்துக்கள் ஹரி..செம..வல்லமையில் பிரசுரம் ஆனது மிக்க மகிழ்ச்சி..இன்னும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeletesuperb
ReplyDeleteவி.வி.சி :))
ReplyDeleteGood
DeleteROFL :-D
ReplyDeleteஎனக்கு உடனே ₹ 500 ஐ அனுப்பவும். விடாது சிரித்ததினால் வந்த எனது வயிற்று வலிக்காக (நல்ல) டாக்டரிடம் காட்ட வேண்டும்.
ReplyDeleteஉங்க கட்டுரை படிச்சேன்.அதுக்கு அப்புறம் எப்போ சிரிசாலும் ஒரே "கல கல"ன்னு சத்தம்.தொண்டையில் ஏதும் கல்லு இருக்குமோன்னு சந்தேகேம்.வைத்தியம் பாக்க வோணும். கொஞ்சம் வண்டி அனுபுவீங்களா?.
ReplyDeletesuper
ReplyDeleteSUPER SIR :-))))))))))))))
ReplyDeleteஹா ஹா. :)
ReplyDeleteYou did it again Hari, Thanks for writing!!
ReplyDeletenicz
ReplyDelete