இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Sunday, June 16, 2013

ஜப்பான் மாப்ளையும் பச்ச மாக்காணும்

மெடிக்கல் காலேஜ். நாள்-9


"டேய் தவிட்டு டப்பா, அந்த சைனீஸ் பொண்ணுங்க பேரு என்ன? இயா மியா, சுவைன் ஹவைனா?"

"டேய் அதுங்க பேரு சோனா, மீனா. அட்டென்டன்ஸ் எடுக்கும் போது காதுல எலும்ப வச்சு நோட்டிருந்தியா?"

"சோனா, மீனாவா? சைனால ஹிந்துலாம் இருக்காங்களா?"

"டேய். அதுங்க மேகாலயாடா..."

"ஓ ஜப்பானா? சரி"
_____________________________________________________________________________________
(அதோ சோனா, லாலாலா லாலா லாலாலா...ரோசாப்பூ, சின்ன ரோசாப்பூ)

"ஹேய் சோனா!"

"நான் மீனா"

"சாரி மீனா. 'ஹவ் ஆர் யூ' வை உங்க மொழில எப்படி சொல்வீங்க?"

"சிதில ஜம்போ சிரிகா முக்கி?"

"என்னாது சிரிகா பக்கியா?"

"இல்ல முக்கி"

_____________________________________________________________________________________

(லாலாலா லாலா லாலாலா...)

"ஹேய் மீனா"

"நான் சோனா"

(சப்ப மூக்கு மீனான்னு நினைச்சா, சோனாவும் சப்ப மூக்கு தானா?? ஆமால்ல ஜப்பான்ல எல்லாரும் சப்பையா தானே இருப்பாங்க. சரி இவக்கிட்ட கொஞ்சம் கடல வறுப்போம்)

"சோனா. 'இன்னைக்கு கிளாஸ் இருக்கா'னு எப்படி சொல்லுவே?

(சோனா மைன்ட் வாய்ஸ்- வாடி சிக்கிட்டியா, நூலா விடுற, வா வா)

"ஹரம்போ கல்கிய பிட்டா, கிளாஸ் புஜாரே கிம்லிகிபல்கா"

"இவ்ளோ பெரிய சென்டென்ஸா!!! ஓகே.. ஹரம்போ கல்கியா..........................."

_____________________________________________________________________________________

(லாலாலா லாலா லாலாலா...)

"ஹாய் மீனா"

"ஹாய் அல்கேட்ஸ்"

"ஹரம்போ கல்கிய பிட்டா, கிளாஸ் புஜாரே கிம்லிகிபல்கா"

"வாட் நான்சென்ஸ்"

(அய்யயோ. எதாவது தப்பா சொல்லிடோமா.... போகாத மீனா, என் ஜப்பான் கிளியே)

_____________________________________________________________________________________

(கர்ர்ர்ர்ர்ர்......)

"ஏய் சோனா"

"ஹிஹிஹி...... ஹாய்"

அன்னைக்கு என்ன சொன்ன? மீனா கிட்ட போய் சொன்னேன். கோவிச்சுக்கிட்டு ஒடிட்டா. அதுக்கப்புறம் எப்ப பாத்தாலும் பீன்ஸ் கண்ணை உருட்டி  மொறைக்கிறா"

"இன்னைக்கு காலேஜ் முடிஞ்ஜோன்ன கிளாஸ்க்கு வா. ஜாலியா பேசிட்டிருப்போம்னு அர்த்தம். இதை மீனா கிட்ட சொன்னியா?. ஹாஹாஹா...."

(சொதப்பிருச்சே. லாலாலா (லவ் பெய்லியர் மெட்டு))

_____________________________________________________________________________________


"டேய் தவிட்டுடப்பா "

"டேய் மச்சி"

"லவ் ஃபெய்லியர் ஆயிடிச்சி மாப்ள. ஜப்பான் பொண்ணுங்களே சரியில்ல"

"டேய். அவங்க மேகாலயாடா. அது இந்தியாவில தான் இருக்கு"

"எங்க இருந்தா என்ன? சப்ப மூக்குகாரிய லவ் பண்ணி டைம் தான் வேஸ்ட். இந்த பழத்த தின்னு பாரேன். கொஞ்சம் புளிப்பா இல்ல?"

"சரி தான்"


_____________________________________________________________________________________

"ஹாய் கெட்டிப்புளி."

"ஹாய் மச்சான்"

"ஏன்டா டல்லா இருக்க?"

"எப்படி MBBS படிச்சு முடிக்க போறோம்ணு பயமா இருக்குடா"

"அதுக்கு தான் அஞ்சரை வருக்ஷம் இருக்கே. கவலப்படாத. பொறுமையா படிச்சுக்கலாம்"

"எப்படி முடிக்கறதுன்னு தெரிலடா. Guyton புக்க பாத்தியா? 950 பக்கம்"

"படிச்சிடலாம் மச்சி"

"எப்படிடா இந்த புக்க அஞ்சரை வருக்ஷத்துக்குள்ள படிச்சு முடிக்க முடியும்?"

"என்னாது???? மாப்ள இது பிஸியாலஜி புக்கு"

"ஆமா எனக்கு தெரியும். இந்த புக்க அஞ்சரை வருக்ஷத்துக்குள்ள படிச்சு முடிச்சா தான் MBBS டிகிரி கிடைக்கும்."

"மாப்ள புரியாம பேசாத. இது பிஸியாலஜி புக். 1 வருக்ஷத்தில எக்ஸாம். அதுக்குள்ள இதை படிச்சு முடிக்கனும். இந்த மாரி 3 சப்ஜெக்ட். 3 புக்கையும் ஒரு வருக்ஷத்துக்குள்ள முடிக்கனும். அதோட தேவப்பட்டா ரெபரென்ஸ்க்கு இன்னொரு 3-4 புக் படிக்கனும். இதெல்லாம் இந்த வருக்ஷம். அடுத்த வருக்ஷம் 4 சப்ஜெக்ட். அதுக்கு ஒரு ஏழெட்டு புக்கு படிக்கனும்"

(வாய் பிளந்து) "டேய் என்னடா சொல்ற. தல சுத்துதுடா. பச்ச மாக்கான் தான் அஞ்சரை வருக்ஷத்துக்கு ஒரே புக்னான்."

"எந்த ஊரு உனக்கு?"

"குந்தவச்சான்புரம். பச்ச மாக்கானும் நானும் ஒரே ஊரு, ஒரே ஸ்கூலு. பூச்சி கத்திரிக்காய் ஸ்கூல ஒன்னா பண்னெண்டாவது 3 வருக்ஷம் படிச்சோம்.""

"இப்போ புரியிது"

"(கண்ணைத்துடைத்தபடி...) " எங்கப்பன் எங்க தாத்தாவோட கழனிய வித்து சாக்குமூட்டைல பணத்த கட்டி என்ன இங்க சேத்து உட்டுட்டு ஊருக்கு பூட்டான். இங்க என்னடான்னா நீ இப்படி சொல்ற"

"மச்சி MBBSனா அப்படித்தான்"

"அடப்போடா"

_____________________________________________________________________________________

--------------------------உண்மை உரையாடல்களை தழுவியது-----------------------------------____________________________________________________________________________________
 5 comments:

 1. சிதில ஜம்போ சிரிகா முக்கி Dr.?

  ReplyDelete
 2. 'குல்ஜக்கா நைனா". அப்படின்னா "நல்லாயிருக்கேன் சார்"ன்னு அர்த்தம்

  ReplyDelete
 3. வணக்கம் டாக்டர் அல்கேட்ஸ்,

  ReplyDelete
  Replies
  1. வாப்பா தம்பி. என்ன மிட்னைட்ல கமென்ட்? தூக்கம் வரலேன்னா இங்க. எனக்கும் வரல. சீட்டாடுவோம்.

   Delete
 4. Ha Ha I can understand your pain algates!

  ReplyDelete