இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Saturday, June 15, 2013

யாரு பழனிவேலா? எங்கேயோ கேட்ட பேரா இருக்கே....

வணக்கமுங்க...

கிளினிக்கில் ஒரு பிஸியான (ஈ-------ஈ------ஈ--------டப்......, ஓழிந்தான்) மாலையில் ஒரு 45வயது ஆண் பேக்ஷன்ட் வந்தார். (இவரை எங்கேயோ பாத்திருக்கேனே....அந்த கடையில? சீசீ இருக்காது )

"வாங்க சார், நல்லாயிருக்கீங்களா?"

" நல்லாயிருந்தா இங்க ஏன் சார் வரப்போறேன்?"
(ஆகா  போன தடவை ட்ரீட்மென்ட் பண்ணி சரியாகதவரா?)

"சரி சொல்லுங்க. என்னாச்சு?"

"ஒரே தல வலி டாக்டர்"

"எங்க வலிக்குது"

"தலயில தான்"

"இல்லீங்க, தலயில எங்க வலிக்குதுனு கேட்டேன்"

"நெத்தியில சார்."

(அழுத்திப்பார்த்து)

"ஐயோ சார் ஜாஸ்தியாகுது.அழுத்தாதீங்க."

"ஒகே ஒகே...பிபி இருக்கா?"

"நீங்க தானே டாக்டர் போன மாசம் பிபி மருந்து கொடுத்தீங்க"
(ஓ. முன்னாடி பாத்திருக்கேனா. ம்ம்ம் நியாபகம் இல்லயே)

(பிபி செக் செய்த பின்)

"160/100 இருக்குங்க. இப்போ பிபி மாத்திரை ரெகுலரா சாப்டுறீங்களா?"

"நீங்க 10நாளைக்கு தானே கொடுத்தீங்க"

"இல்லீங்க. 10 நாள் கழிச்சு வரசொல்லியிருப்பேன். பிபி மாத்திரையை நிறுத்தவே கூடாது"

"அப்படியா...?"

"நம்ப பழய சீட்டு வச்சிருக்கீங்களா? இல்ல என்ன மாத்திரை தெரியுமா?"

"இல்லயே சார். நீல கலர்ல இருக்கும்"

"(இதுக்கு கேக்காமயே இருந்திருக்கலாம்)"

"சுகர் இருக்கா? பாத்திருக்கோமா?"

"அதான் அழுத்தி பாத்தீங்களே...."

"இல்லங்க. அது ரத்த கொதிப்பு பாக்குறது"

"இல்ல"

"ஒகே. சுகர் பாக்கனும், ஈசிஜி பாக்கனும், கொஞ்ச ரத்த டெஸ்ட் பண்ணணும் கிட்னி நல்லாயிருக்கானு பாக்க, உப்பு நீர் இருக்கா பாக்கணும், கொழுப்பு இருக்கா பாக்கணும், இதெல்லாம் பிபி பேஷன்ட்ஸ்க்கு வருக்ஷத்துக்கு ஒரு தடவை பாக்கணும்..."

"எவ்ளோ ஆகும் டாக்டர்?"

"800-900 வரும். நம்மகிட்டயே பண்ணிக்கலாம். (ஹையா இன்னிக்கு பால் காசு செட்டில் பண்ணிடலாம்) "

"ஒரு மாசத்துல பண்ணிடறேன் டாக்டர்."

(வட போச்சே!!!)

"சரி இந்த மாத்திரையெல்லாம் ஒரு மாசத்துக்கு சாப்பிடுங்க. ஒரு மாசம் கழிச்சு கரெக்டா வாங்க. மாத்திரை நிப்பாட்ட கூடாது."

"சரிங்க டாக்டர். டாக்டர் என் வீட்டுகாரங்களுக்கு தேள் கடிச்சிடிச்சி. மந்திரிச்சோம். சரியாவல. மருந்து எழுதி கொடுங்க."

(அடப்பாவி. ஒசி ப்ரிஸ்க்ரிப்க்ஷனா?)

"ஏங்க. தேள் கடிச்சு சீரியஸ் ஆனவங்களாம் இருக்காங்க. போய் கூட்டிட்டு வாங்க."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது டாக்டர். சீட்டு கொடுங்க."

(கர்ர்ர்ர்ர்)

"இந்தாங்க. க்ரீமும் ரெண்டு விதமான மாத்திரையும் கொடுத்திருக்கேன்."

"வரேங்க டாக்டர்"

"ஹிஹி...... ஃபீஸ்?"

"இந்தாங்க 50 ருபாய். "
(ஹையா பஜ்ஜி, பப்ஸ், டீக்கு ஆச்சு)

"பாக்கி கொடுங்க."

"பாக்கி இல்ல. இதான் ஃபீஸ். ஹிஹி"

3 மாதம் கழிச்சு, அதே பேக்ஷன்ட்,

"வாங்க சார், நல்லாயிருக்கீங்களா?"

" நல்லாயிருந்தா இங்க ஏன் சார் வரப்போறேன்?"

"என்னாச்சு?"

"ஒரே தோள் பட்டை வலி டாக்டர்"

"பிபி இருக்கா?"

"போன மாசம் இருக்குனு சொன்னீங்களே"

"சீட்டு எடுத்துட்டு வந்தீங்களா, மாத்திரை பேர் தெரியுமா"

"மஞ்ச கலர்ல பட்டானி மாதிரி இருக்கும் டாக்டர்"

(கிழிஞ்சது)

...................................................................................
...................................................................................
"மாத்திரை எத்தன நாள் சாப்டீங்க. "

"5 நாள் டாக்டர். அப்றம் தலவலி போயே போச்சு. நிப்பாட்டிடேன்...."

(அடங்கொய்யால)

" பிபி மாத்திரையை நிறுத்தவே கூடாது. மூளை, இதயம், கிட்னி ஃபெயிலியர் ஆயிடும்"
..................................................................................
.................................................................................
..................................................................................
"டெஸ்டெல்லாம் எடுக்கணும்"

"அடுத்த மாசம்......."
...................................................................................
...................................................................................
...................................................................................
"ஹிஹி ஃபீஸ்"

"இந்தாங்க 50 ருபாய். "
(ஹையா பஜ்ஜி, பப்ஸ், டீக்கு ஆச்சு)

"பாக்கி கொடுங்க."

"பாக்கி இல்ல. இதான் ஃபீஸ். ஹிஹி"

இடம்: Dr. அல்கேட்ஸின் எதிரி Dr. டரியல்நாதன் ஆபிஸ்

4 மாதம் கழித்து, அதே பேக்ஷன்ட்

"டாக்டர் ஒரே தலசுத்தல்"

...................................................................................
...................................................................................
...................................................................................
"டெஸ்ட்லாம் எடுக்கனும்"

"சரிங்க டாக்டர். இப்பவே எடுங்க"
...................................................................................
...................................................................................
...................................................................................
இடம்: Dr. அல்கேட்ஸ் கிளினிக்

2 மாதம் கழிச்சு, அதே பேக்ஷன்ட்

"டாக்டர் ஒரே நெஞ்சு வலி"

"பிபி இருக்கா?"
...................................................................................
...................................................................................
...................................................................................
"வருக்ஷத்துக்கு ஒரு தடவ இந்த டெஸ்ட்லாம் எடுக்கணும்"

"எடுத்தாச்சு டாக்டர்"

"அப்படியா? காமிங்க..........ஒ Dr. டரியல்... (அடப்பாவி கேபிள் காசு போச்சா) இதயத்துல ரத்த குழாய் அடைப்பு இருக்கே. சரி அவர் மாத்திரை தொடர்ந்து சாப்டுறீங்களா?"

"10 நாள் சாப்ட்டேன் டாக்டர். தல சுத்தல் போயே போச்சு."

(எனக்குனு வரவங்க மட்டும் ஏன் இப்படி இருக்காங்க)
---------------------------------------------------------------------------------------------------------------------------

6 மாதம் கழிச்சு அவர் மச்சான், வயது 49

"வாங்க சார், நல்லாயிருக்கீங்களா?"

" நல்லாயிருந்தா இங்க ஏன் சார் வரப்போறேன்?"

(இதை எங்கேயோ கேட்டிருக்கேனே???)

"என்னாச்சு?"

"ஒரே கோவம் கோவமா வருது டாக்டர்"

(ஐயயோ. சரி ஃபீஸ் கம்மியா கேப்போம்)

"பிபி இருக்கா?"

" தெரிலியே... என் தங்கச்சி வீட்டுக்காரர் இப்போ தான் ஹார்ட் அட்டாக்ல இறந்தார். இங்க கூட வந்திருக்கார்"

"அப்படியா. தெரிலயே. சரி... இந்த மாத்திரையெல்லாம் தொடந்து சாப்டுங்க."

"சரிங்க டாக்டர்"

"ஹிஹி ஃபீஸ்"

"இந்தாங்க 50 ருபாய். "
(ஹையா பஜ்ஜி, பப்ஸ், டீக்கு ஆச்சு)

"பாக்கி கொடுங்க."

(இதையும் எங்கேயோ கேட்டிருக்கேனே)

"பாக்கி இல்ல. இதான் ஃபீஸ். ஹிஹி"

3 மாதம் கழிச்சு

"மாத்திரையெல்லாம் சாப்டீங்களா?"

"ஒரு வாரம் சாப்டேன் டாக்டர்"
-----------------------------------------------------------------------------------------------------------------------------

(உக்காந்து யோசிக்கும் போது : ஏன் சில பேக்ஷன்ட்ஸ் எல்லாம் ரெகுலரா வரமாட்டேங்கிறாங்க. அந்த Dr. டரியலை பாத்தவர் என்னானார்?)
-----------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்: Dr. பண்ணாரி, சைக்கியாட்ரிஸ்ட் ஆபிஸ்

"Dr. அல்கேட்ஸ்: சார் என் வீட்டுக்காரங்க சொல்றாங்க எனக்கு நியாபகமே இருக்கறதில்லயாம்"

"Dr. பண்ணாரி: (இவனா???)பாஸ் மாத்திரையெல்லாம் ரெகுலரா சாப்டீங்களா?"

"Dr. அல்கேட்ஸ்: 10 நாள் சாப்ட்டேன் சார். நல்லாயிடிச்சி. ஸ்டாப் பண்ணிட்டேன்."

1 comment: