இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Thursday, June 20, 2013

ரகுத்தாத்தா... ஏய் ரகுத்தாத்தா இல்ல, ரகதாதா....

    நமது கிளினிக்கில் எல்லா மொழிக்காரர்களும் வருவார்கள். கொஞ்சம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், அதோட முக்கியமாக சைகை பாக்ஷையும் தெரிய வேண்டும். எல்லா மொழிலேயும் கொஞ்சம் தெரிந்தால் போதும். ஒப்பேத்திடலாம். நம்மக்கிட்ட யார் வருவாங்க? சளி, இருமல், ஜீரம், வாந்தி, பேதி தானே. எப்பவாவது BP, சுகர்  பேக்ஷன்ட்ஸ் வருவாங்க. 

  பேக்ஷன்ட்ஸ் நம்மக்கிட்ட வந்து தெலுங்கானா, சட்டிஸ்கர் மாவோயிஸ்ட் பிரச்சினை பத்தியா பேச வராங்க? என்ன கம்ப்ளைன்ட்ன்னு கேப்பேன். அவங்க சொல்லுவாங்க. தலைவலி, வாந்தி, etc etc ன்னு. ஸோ, எல்லா மொழிலயும், 20 வார்த்தை தெரிஞ்சா போதும். ஃபீஸ் வந்துடும்.

  அன்னைக்கு ஒரு நார்த் இந்தியன், டிப்டாப்பா சட்டை, ஜீன்ஸ், க்ஷூவெல்லாம் போட்டுக்கிட்டு வந்தார். ஆனா கொஞ்சம் அழுக்கா இருந்தார். டைரக்ட்டா உள்ள வந்துட்டார், க்ஷூவோட...

      "நர்ஸ், என்ன க்ஷூவோட பேக்ஷன்ட்டை உள்ளே அனுப்பிட்டீங்க?"

  "நாலரை வருக்ஷம் நர்ஸிங் படிச்ச எனக்கு இதான் வேலயா? நான் ரிசைன் பண்றேன். போங்க சார்" என பக்கத்து ரூமிலேந்து கத்தினார்.

     "இல்ல. ஒன்னுமில்ல. நீங்க வேலய பாருங்க"

   அவரிடம் "ஸாப். தேக்கோஜி. க்ஷூ இதர் அலோவுடு நஹி ஹை.
உதர் கழட்டிட்டு, இதர் ஆயியே" ன்னேன்.

   அவர் பதறி "நஹி ஸாப். நஹி சாயியே" ன்னார்.

   என்ன நான் சொன்னது இவருக்கு புரிலியா? கழட்டறத்க்கு என்ன??? ஆங். கண்டுப்புடிசிட்டேன். நிகால்

       "க்ஷூ உதர் நிகால் ஜி"

      "நஹி சாப்" (வேணாம்கற மாதிரி மொறச்சாரு)

       "நர்ஸ், இவரை க்ஷூ கழட்டிட்டு வரச்சொல்லுங்க"

  நர்ஸ் உள்ளே வந்து, அவ்ரைப் பார்த்த பின், "வேணாம் சார், அவரு க்ஷூவோடயே இருக்கட்டும், இல்லாட்டி வம்பாயிரும்"

 "அதெல்லாம் இல்ல!! க்ஷூ போட்டுக்கிட்டு உள்ள வந்தா, மத்தவங்களுக்கும் இன்ஃபெக்க்ஷன் ஆயிடும். எங்கேல்லாம் போய்ட்டு வந்தாரோ?"

  அவர் நான் சொன்னது புரிஞ்ச மாதிரி, வெளியே போய் க்ஷூ கழட்டிட்டு உள்ளே வந்தார். அல்கேட்ஸா கொக்கா.

   "ஆயியே. பைட்டியே. அச்சி ஹை?" (இப்போ புரியுதா, நம்ம அப்பா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஓரமா நின்னு நொங்கு குடிச்சவர்ன்னு)

  அவர் உக்காந்தார்.

    "க்யா குவா?"

    "சர் தர்த், பூரா தர்த், புகார் ஆயியே சாப்" (தலைவலி, உடம்பு வலி, ஜூரம் வருது சார்)

  திடீர்ன்னு கிடாவெட்டுக்கு நடுவில நிக்கிற மாதிரி நாத்தம். நமக்குத் தான் எல்லாம் பழகிப் போச்சே. என்னாயிருக்கும்? எதாவது பக்கதுல உள்ள சாக்கடை ஒடச்சுக்கிச்சா?

   சரி தொழிலைப் பாப்போம்.

    "கித்னே தீன் ஏ ப்ராப்ளம் ஆத்தா ஹை?" (எத்தன நாளா பிரச்சனைங்கரத அப்படிக்கேட்டேன்)

       "தோ தீன் சாப்" (2 நாள்)

  உள்ள நர்ஸ் வந்து பாத்துட்டு, என்னைப் பாத்து, மூஞ்சியை அக்ஷ்டகோணலாக்கிட்டு, வெளியே ஓடிட்டாங்க. இப்போ ஸ்மெல் ஜாஸ்தியாகி, ஒரு ஹோட்டலோட ஒரு நாள் குப்பைத்தொட்டிய நம்ம மேல கவுத்த மாதிரி நாத்தம்.

  அவருக்கிட்ட மூஞ்சி சுளிக்க முடியுமா? காசு போயிடுமே. அதனால புன்னகையோட,

      "காசி ஆகயா?" (இருமல் இருக்கா?).  என் பாம்பே பொன்டாட்டி, ஒரு நாள், நான் கிளினிக்ல பேசற ஹிந்தி பாத்து பயங்கரமா சிரிச்சு, சிரிச்சு, அவங்களுக்கு குளிர் ஜூரமே வந்துடிச்சி. 

   அவர் என்னைப் மொறைச்சார், ஏன்டா நான் வலியில கக்ஷ்டப்படுறேன், நீ இளிச்சிக்கிட்டுக்கே?.  " நஹி. தோடா உல்டி ஹை" (கொஞ்சம் வாந்தி).

       "ஆஆ போலோ ஜி"

        "ஆஆ......"

    வாயில் டார்ச் அடித்துப் பார்த்து விட்டு,

    "இதர் தேக்கோஜி"ன்னு (என்னைப் பாருங்கன்னு) சொல்லிட்டு, ஒடி வந்த நாய் மூச்சு வாங்கற மாதிரி மூச்சை இழுத்து இழுத்து விட்டேன். என்னைப் பார்த்து விட்டு அவரும், மூச்சை இழுத்து  விட்டார். நெஞ்சுல ஸ்டெத் வெச்சு பாத்தேன். (அல்கேட்ஸ், மொதல்ல "மூச்சை நல்லா இழுத்து விடுங்க அப்ப்டின்னு சொல்றதுக்கு, ஹிந்தில என்னன்னு கண்டு புடிக்கணும்).

   ப்ரெஸ்கிரப்க்ஷன் எழுதி விட்டு, (இப்போ அழுகின முட்டை வாடை...யப்பா மூச்சு முட்டுதே, )

    முதல் வரியைக் காட்டி, "ஜி. ஏ டேப்ளட், தீன் மே தீண் பாத். சுபே ஏக், மதியானம் ஏக், ராத் ஏக்" (இந்த மாத்திரை, ஒருநாளைக்கு மூனு வேளை, காலை, மதியானம், ராத்திரி. ப்ளோவில 'மதியானம்' ங்கறத்துக்கு என்னனு அவங்க கண்டுப் பிடிச்சுடுவாங்க)

    அடுத்த வரியைக் காட்டி "ஏ டேப்ளட், தீன் மே தோ பார். கானேக்கா பெஹலே" (இந்த மாத்திரை ஒரு நாளைக்கு இரண்டு தடவை, சாப்பாட்டுக்கு முன்னாடி போடணும்)

    "ஜில்காலோ, முக்காகி பக்கா உச்சா?"

    (ஜில்லா முக்கி உச்சாவா? அப்டின்னா???) நான் பொதுவா தலையாட்டிட்டு,

  "ஆமா, வெந்நீர் தான் குடிக்கணும். தண்டா பாணி நஹி, கரம் பாணி ஒன்லி, ஸ்நானத்துக்கும் கரம் பாணி தான்" (அய்யய்யோ, ஸ்நானம் கன்னடமாச்சே, சரி விடு)

   அவர் ஙே ன்னு முழிச்சார்

   குளிக்கிற மாதிரி போஸ் காட்டி, "கரம் பாணி, தண்டா நஹி" ன்னேன்.

   ஃபீஸ் கரெக்ட்டா குத்துட்டு வெளியே போனார்.

  நர்ஸ் நாத்தத்தை கையால் ஆட்டி விலக்கிக் கொண்டே உள்ளே வந்தார்.

  நர்ஸ், "ஹிஹி, நான் அப்பவே சொன்னேன்ல, க்ஷூவை கழட்ட சொல்லாதீங்க, பிரச்னை ஆயிடும்னு"

       "ஆமாமா (ஏமாற்றத்தை மறைத்தவாறு). ஆமா? ஸாக்ஸை தோய்க்கவே மாட்டாரா இவரு?"

      "பாவம் சார். இவங்கெல்லாம் இந்தியாவோட பெரிய கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியான பாச்சான் & உருண்டை யில வேல பாக்கறாங்க. 6000 ருபா சம்பளம். லீவு கிடையாது. 12 மணி நேரம் வேல. சாக்ஸை தோய்க்க எல்லாம் டைம் இருக்காது சார். ரொம்ப ஏழைங்க. எங்கேந்தோ புள்ள குட்டியெல்லாம் வுட்டுட்டு இங்க வந்து கக்ஷ்டப்படறாங்க"

  "சிஸ்டர், நாத்தத்துல எனக்கு லைட்டா தலைசுத்துது. பாக்கி பேக்ஷன்ட்ஸை நாளைக்கு வரச்சொல்லுங்க. நான் வீட்டுக்கு போறேன்"

    நர்ஸ், யாரும் இல்லாத ரூமில், கைகளை காற்றில் ஆட்டியபடி, "ஏ எல்லாரும் எழுந்து போங்க. டாக்டருக்கு முடிலயாம். நாளைக்கு வாங்க" என்றாள். பிறகு என்னைப்பாத்து "ரெண்டு நாள்ள வந்ததே இவரு ஒருத்தர் தான். இதுல பாக்கி பேக்ஷன்ட்டை அனுப்பனுமாம். நல்லா பகல் கணவு காண்றீங்க"

    அவர் வெளியே போய் கத்தினாள், "டாக்டர், இன்னொரு பேக்ஷன்ட் சிக்கிட்டார், ச்சீ வந்துருக்கார். அவரும் ஹிந்தி தான்"

   நான் பதறி, "க்ஷூ கழட்ட வேணாம், க்ஷூ போட்டுட்டே உள்ள வரச்சொல்லுங்க. மொதல்ல கொஞ்சம் ஸ்ப்ரே அடிங்க"

   இவரும் டிப்டாப் ஆசாமி, அழுக்குடன், பாச்சான் & உருண்டை கம்பெனி கட்டுமான தொழிலாளி.

      அவர் "நமஸ்தே ஸாப்" என்றார்.

              "நமஸ்தே, நமஸ்தே. ஹிஹி. பைட்டியே..... க்யாகுவா?"

              "சிங்கா ஜலப்பு பச்சிமா கும்டியா கிக்கா!!!"

    ஒன்னும் புரியாமல் "ஒ. டீகே, டீகே. வேற எதாவது பிரச்னை இருக்கா?"

     அவரோட கால காண்பித்து, "பச்சிமா" என்றார்.

            "ஓ. கால்ல புண்ணா! எங்கே? கிதர்?"

  க்ஷூவை கழட்ட ஆரம்பித்தார். ஐயய்யோ. மறுபடியும் மொதல்லேந்தா??? கரெக்ட்டாக க்ஷூவைக் கழட்டி முடிக்கவும் நர்ஸ் புயலென வெளியேறுவதும் ஒன்னா நடந்தது.

   எனக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்பமானது. (இது நம்ம நாயோட மூச்சுக் காத்து ஸ்மெல்லாச்சே...)

    காலைக் காம்பிச்சார். காலில் ரொம்ப சிறிய புண். ஆனா நெறிக்கட்டி, லைட்டா ஜூரம் வேற. பெட்டைக் காட்டி "ஏறி படுங்க"

       " சிஸ்டர் வாங்க, ட்ரெஸிங் பண்ணணும்."

       (ஹிஹி, நர்ஸ் அனுபவிங்க) "அந்த காஸ் பீஸ் (gauze piece-பஞ்சு மாதிரி இருக்குமே) எடுங்க, பீட்டாடெய்ன் ஆயின்ட்மென்ட் எடுங்க"

      விடுவிடுன்னு ரெண்டு நிமிக்ஷத்துல முடிச்சேன். எப்படி காலுக்கு பக்கத்தில குணிஞ்சு  ட்ரெஸிங் பண்ணறதாம்? முடிச்சிட்டு, அப்படியே சேரில் வந்து விழுந்தேன். கொஞ்சம் புரட்டிக்கொண்டு வந்தது. நர்ஸ் சிறுத்தை ஸ்பீடில் ஓடினார்.

          மாத்திரைச் சீட்டு எழுதிக் கொடுத்து விட்டு..

     "தீன் தீண் டேப்ளட். ஏ டேப்ளட், தீன் மே தீண் பார்.  ஏ டேப்ளட் தீன் பார். கானாக்கா பாத்"

        "டீகே ஸாப்"

        அவர் காலைக் காட்டி "பாணி இதர் நஹி"

         "கியா???"

   "பாணி, பாணி, இதர் இதர் நஹி ஹே" (கால்ல தண்ணி படாம பாத்துக்கணும்னேன்)

         "ஓ"

         அவர் கிளம்பினார்.
        அங்கே மெடிக்கல் க்ஷாப்பில் எப்படி ஹிந்திக்காரர்களை சமாளிக்கிறார்கள் என்று எட்டிப் பாத்தேன். 5 வருக்ஷமாக கடை வைத்திருக்கிறார்களே. நன்றாக ஹிந்தி பேசுவாங்கலாயிருக்கும்.

         சாவி சிஸ்டர் "இங்க பாருங்க. 3 வேளை இந்த மாத்திரையை சாப்பிடணும். இந்த மாத்திரை 2 வேளை. இந்த மாத்திரை மூனு வேளை"

          "கியா???"

           நான் (ஹிஹி. நம்ம கேஸ் தானா...)

     சாவி, சத்தமாக "3 வேளை இந்த மாத்திரையை சாப்பிடணும். இந்த மாத்திரை 2 வேளை..................................."

      நான் "சாவி சிஸ்டர், நீங்க சத்தம் போட்டு சொன்னா மட்டும் அவருக்கு தமிழ் புரிஞ்சுடுமா?"
 
     கொஞ்ச நேரம் திரு திருன்னு முழிச்சு, "ஆமால்ல??? ஐய்யய்யோ. இது தெரியாம 5 வருக்ஷமா இப்படித்தான் கத்தி கத்தி மாத்திரை குடுக்கறேன்"

      "இப்படி சொல்லுங்க. ஏ டேப்ளட், தீன் மே தீன் பார். தீன் தீன் சாப்டுங்கன்னு சொல்லுங்க" (ஒரு நாளைக்கு மூனு வேளை, அப்படி மூனு நாளைக்கு சாப்பிடுங்க)ன்னு சொல்லிக்கொடுத்தேன். (டேய் அல். ஹிந்தில நீயே ஒரு தற்குறி, இப்போ இன்னொருத்தருக்கும் தப்புத்தப்பா சொல்லிக்குடுக்கறியா)

அடுத்த நாள்...

       கால் புண் பேக்ஷன்ட் திரும்பி வந்தார், வயித்தை பிடித்துக்கொண்டே...ஓ  வயித்து வலியா.. ஏன்?

         நான் "ஹேஹேஹே, க்ஷீ நிகால் நஹி" (கழட்டாதீங்கஅஅஅஅஅ........)

        "அந்த மாத்திரையெல்லாம் சரியாப்போச்சு. ஆனா வயித்து வலி"

        "என்னாது, சரியாப் போச்சா? எப்படி சாப்ட்டீங்க?"

   "வேளைக்கு மூனு மூனு மாத்திரையா, ஒரு வேளைக்கு 9 மாத்திரை சாப்ட்டேன். ஒரே நாள்ல தீந்துடுச்சு"

     "அடக்கடவுளே!!!!!!"

--------------------------------------------------------------------------------------------------------------------------
10 நாள் கழித்து......

          நர்ஸ் கொசு அடித்துக்கொண்டிருந்தார், நான் ஈ ஒட்டிக்கொண்டிருந்தேன்.

    காது கேக்காத, ஹிந்தி பேக்ஷன்ட் ஒருவர், தனியாக வந்தார். குரங்கு வித்தை, குரளி வித்தை, பஃபூன் வித்தை காட்டி வைத்தியம் பாத்தேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

3 நாள் கழித்து...

   இதான் சூப்பர். ஒரு ஒரியா மொழிக்காரர், துணைக்கு பேச ஒரு ஹிந்திக்காரரை கூட்டிக்கொண்டு வந்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

26 comments:

  1. ஹ,ஹ,ஹா,ஹா..செம,செம..சிரிச்சு முடியல ஹரி..சூபேர்..எங்கயோ போயிட்ட.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த கத உன் கத தான். ஜாக்கிரதை...(really. will type today)

      Delete
    2. ஹையையோ..நான் எஸ்கேப்.

      Delete
  2. அல்கேட்ஸ்....
    எங்க ஊருக்கு வர்றப்போ செப்பல் போட்டுட்டு வாங்க! :))))

    ReplyDelete
    Replies
    1. தல. கொஞ்சம் நம்ம பேக்ஷன்ட்டா ஒரு நாள் வாங்க. ஒரு கத தேவப்படுது. ஃபீஸ் வேணாம்.

      Delete
    2. chelli sreenivasan20/6/13 1:40 PM

      ஹரி நிம்பல் கத நம்பல் படிச்சான்..ஹை ஹை அச்சா ஹை... !! இது தும்மல் நஹி ஹை !!...மேரா விம்மல் ஹை...ம்..ம்.. ம்..ம்..ம்...

      kudos simply enjoyable writing :)

      Delete
    3. தேங்ஸ் மேடம். உங்க கமென்ட்டே படு காமெடியா இருக்கு. யோவ் பானி பூரி நீட்டா கம் கரோ.

      Delete
  3. "ரெண்டு நாள்ள வந்ததே இவரு ஒருத்தர் தான். இதுல பாக்கி பேக்ஷன்ட்டை அனுப்பனுமாம். நல்லா பகல் கணவு காண்றீங்க"

    அருமை. நகைச்சுவையான எழுத்து நடை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. Please avoid Word Verification in Comments; you have to do in Settings.
    Best Wishes.

    ReplyDelete
  5. ஹா..ஹா செம ஜாலியா இருந்தது ஹரி படிக்கிறப்ப... சும்மா சொல்ல கூடாது லக்ஷ்மி நல்லாத்தான் ஹிந்தி கிளாஸ் எடுத்திருக்காங்க உங்களுக்கு...சூப்பரா எழுதுறீங்க ... ம்ம்ம் கீர்த்திக்கு போட்டியா??

    ReplyDelete
    Replies
    1. ஹரி நாலு போஸ்ட் ல எங்கயோ போயாச்சு..அவ்வ்வ்வ்..நானெல்லாம் போட்டி போட முடியாது..

      Delete
    2. @ushasoundar: அட நீங்க வேற. அவ எனக்கு சொல்லிக்குடுத்தது இது தான்
      சுனோ- excuse me
      நீட்டா- காரம்
      சீதே - ம்ம்ம் கீழேவா இல்ல நேரா வா? taxi காரன்ட்ட கத்துவா. சீதே ஜாஒ ன்னு

      Delete
  6. Amazing Hari! You made me laugh like anything! Thanks for relieving my stress for some time! You are really a good doctor now!!

    ReplyDelete
  7. Awesome hari,nice try,but most of the incidents corelate mine too,
    hindi neenga paravalla,+naaan superb ,anyhow nice upload

    ReplyDelete
  8. Appaadaa Hari....inime unga akka voda page ku pogaama neraa unga blogkku vandhudaren....enna oru sense of humour.....hats off...niraiya ezhudhunga...oru rasigar mandram aarambikkanum...naan thaan thalaivi!!!

    ReplyDelete
    Replies
    1. Nithya Ramesh.

      Delete
    2. அட. ஆரம்பிச்சாச்சுங்க. கர்னாடகா, ஈரோடு, மாயவரம், ஆப்ரிக்கால branches வந்தாச்சு. ஜாயின் பண்ணிடுங்க. 2 கிலோ முறுக்கு தான் கட்டணும்.

      Delete
  9. வடிவேல ரெஸ்ட் எடுக்கும் போது அல்கேட்ஸ் க்கு நல்ல. சான்ஸ்.

    ReplyDelete
  10. வடிவேல ரெஸ்ட் எடுக்கும் போது அல்கேட்ஸ் க்கு நல்ல. சான்ஸ்.

    ReplyDelete
  11. அசத்தல்... ஒரே அமர்க்களம் :-)

    ReplyDelete
  12. அட சும்மா பிச்சிக்கிட்டு வருதுங்க சிரிப்பு... செம.. செம.. ரொம்ப நாளைக்கு அப்றோம் நா அவ்ளோ சிரிச்சேன்.. இப்போ வீட்ல தூங்கிற்றுந்தவங்க எல்லாம் எழுந்தாச்சு என் சிரிப்பு சத்தம் கேட்டு.. கலக்குங்க சார்..

    ReplyDelete