இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Monday, June 17, 2013

மூடிட்டு உன் வேலய மட்டும் பாரு

வாங்க பாஸு. மார்னிங்பா...

    MBBS முடிச்சப்புறம் நம்ம டேரா தமிழ்நாட்ல ஒரு பெரிய சிட்டியான குரங்குக்கோட்டைல தான். அங்க கிழவன்பேட்டைல வீடு. நம்ம வீட்ட ஒரு வேனுக்குள்ள போட்டு அடக்கிடலாம். அவ்ளோ சின்னது. நம்ம ஏரியா கிட்ட தான் டம்ளர், முக்காலி, பல்பு போன்ற ஏரியாக்கள் இருந்தது. அந்த மூனு ஊருலேயும் வேல பாத்திருக்கேன்.

    பல்பு ஊரு ஹாஸ்ப்பிடல்ல நமக்கு மதியானம் 2-9 டூட்டி. 80 பேக்ஷன்ட் பாக்கணும். ஒரு பேக்ஷன்ட்டுக்கு 10ருபாய் வாங்குவாங்க. நமக்கு நாள் சம்பளம். வெகு சில நூறு ருபா. அவ்ளோ தான். டாக்ஸ், வீட்டு வாடகை, காய்கறி, சினிமா, கரண்ட் பில் போக பைக் பெட்ரோல் காசு மிஞ்சும்.

     ரொம்ப நாளா தினமும் ஒரு சுகர் பேக்ஷன்ட் வந்திட்டிருந்தார். கால்ல பெரிய புண். நல்லா குள்ளமா, குண்டா, கறுப்பா இருப்பார். நேரா எங்கிட்ட வராம மாலதி நர்ஸ்க்கிட்டயே போவார். அது கொஞ்சம் பாக்க நல்லாயிருக்கும். நான் பக்கத்து ரூமிலே தனியா பேக்ஷன்ட் பாக்க, அங்க ஆஹாஹா ஒஹோஹோ ஹேஹேஹேண்ணு சத்தமா சிரிப்பு கேக்கும். கறுவிக்கிட்டே இருந்தேன்.

    ஒரு மூனு நாளா மாலதி லீவு. 3 நாளா அவருக்கு ட்ரெஸிங் பண்ணல. மத்த சிஸ்டர்ஸ் யாரும் அவரு கால தொடவே பயப்படுறாங்க. பெரிய புண்ணு. என்னை கூப்ட்டாங்க. ஒகே. பட்சி சிக்கிடிச்சு. ட்ரெஸிங் பிரிச்சு பாத்தா பாதத்தின் மேல் பகுதியில பெரிய புண். ஆனா கொஞ்சம் ஆறிட்டிருந்துது. தினமும் ட்ரெஸிங் வராரே. இன்னும் ஒரு வருக்ஷம் ஆகும் போல தெரிஞ்சுது. நான் ட்ரெஸிங் முடிச்சு பாதத்துக்கு கீழே பாக்குறேன், தோல் லூசாக உள்ளே சதையோட ஒட்டாம இருந்துது. தோலுக்கு உள்ளே புண் ஸ்டார்ட் ஆயிருந்தது. 

    கத்திய எடுத்து தோலை வெட்ட போனா, அவர் கதறுறார் " சார் வேணாம் சார்"

   "இல்லீங்க. மேலயும் கீழேயும் ரெண்டு புண்ணும் சேந்துச்சுனா ஆறவே ஆறாது, காலை எடுக்க வேண்டியதான்" னேன்.

   "பரவாயில்ல சார். என்ன வுட்ருங்க"

   "ஹலோ உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். தோலை வெட்டி தினமும் ட்ரெஸிங் செஞ்சா கீழ உள்ள புண்ணும் ஆறிடும்" ணு சொல்லி நீட்டா தோலை வெட்டி எடுத்தா, நாத்தம். நர்ஸ் எல்லாம் ஒடுறாங்க. புண் கொஞ்சம் பழசு, தோல் செத்து போச்சு. ஆனா சும்மா மூடிட்டுருந்துது. நான் திருப்தியா ட்ரெஸிங் பண்ணி முடிச்சேன்.

    அதுக்கப்புறம் மாலதிய கூப்ட்டு, " அப்பப்போ டாக்டரும் அவன் புண்ணை பாக்கணும். நீங்க கீழ பாக்காம மேல மட்டும் இதே மாரி பண்ணிட்டிருந்தா அவர் காலை எடுக்க வேண்டியிருக்கும். இன்ஃபெக்க்ஷன் உடம்புக்கு பரவினா, அப்றம் அவர ஐசியூல தான் அட்மிட் பண்ணணும். ஒழுங்கா இருங்க" ன்னேன்.

     பெரிய டாக்டரை நான் கூப்ட்டு அவர பாக்க வெச்சேன்.

   அதுக்கப்புறம், மாலதி நான் வேலய விட்டு போற வரை லீவே எடுக்கல. அந்த பேக்ஷன்ட்டும் என்னையும் பாக்கல, வேற எந்த டாக்டரையும் பாக்கல. மாலதி மட்டும் தான். தினமும் ஹாஹாஹா ஹோஹோஹோ ஹெஹெஹெ தான். நமக்கு திரும்பவும் காண்டு தான்.

  என்னை எப்போ பாத்தாலும் மொறைப்பார். நான் வேற பக்கம் திரும்பிடுவேன்.

   ஒரு நாள், நான் ரவுண்ட்ஸ் கிளம்பியாச்சு. ஸ்டெத்தை மறந்துட்டேன். திரும்பி வந்தா அவருக்கு பக்கத்து ரூமில ட்ரெஸிங் நடக்குது. அவன் சொல்றான் "Dr. அல்கேட்ஸ்னால எனக்கு மேல இருந்த புண் கீழேயும் வந்துடிச்சி. ஒரு நாள் தான் கைவச்சாரு. அதுக்கே இப்படி. நல்லவேலை புண்ணு படக்ஸ்ல இல்ல. இல்லாட்டி முன்னாடியும் எடுத்திருப்பாரு. ஹாஹாஹா ஹோஹோஹோ"

(அடப்பாவி கீழ புண் அல்ரெடி இருந்துதுயா. பெரிய டாக்டர் கூட புண்ணை பாத்து என்ன பாராட்டினாரே?)

கொஞ்ச மாசம் கழிச்சு, அவர் காலை எடுத்துட்டாங்க. கால்ல கட்டோட என்ன பாத்து மொறைச்சார்.

                                  " போங்க. மாலதி அந்த ரூமிலே இருக்கு"

5 comments:

 1. செம,செம...செம ட்ரீட்மென்ட்..வாழ்த்துக்கள் ஹரிஹரன்.

  ReplyDelete
 2. Extremely artificial writing.

  ReplyDelete
 3. நல்லாதனய்யா இருக்கு! எதுக்கு 'comment' போடுன்னு கேட்கறீங்க? அதெல்லாம் தானால்ல வரணும்...! படிச்சமாதிரி இல்ல. நேர பேசினமாதிரி இருக்கு...! வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 4. கொஞ்ச மாசம் கழிச்சு, அவர் காலை எடுத்துட்டாங்க. கால்ல கட்டோட என்ன பாத்து மொறைச்சார்.
  " போங்க. மாலதி அந்த ரூமிலே இருக்கு"

  Very Nice :)

  ReplyDelete