இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Tuesday, June 18, 2013

"ஸ்டார்ட் ம்யூசிக். அட்றா அவன!!!"

சற்றே பெரிய கதை

குரங்குப்பேட்டை சிட்டி, டம்ளர் ஏரியா ஹாஸ்பிடல்

    முதல்வன் படத்துல அர்ஜீன் அப்பா ஒரு வசனம் சொல்லுவார். "லைஃப்ல ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா நல்லாயிருக்கும்ல"ன்னு. பழய நாட்களுக்கு போகணும்னு எல்லாருக்கும் ஒரு ஆசை, இல்ல ஒரு பேராசை இருக்கும்ல? ஆனா நாம சந்தோக்ஷமான சம்பவங்களுக்கு தான் போவோம். சங்கடப்பட்ட நாட்களுக்கு போகணும்னு விரும்ப மாட்டோம். அப்படி நான் நினைக்கும் நாட்களில் ஒன்று இதோ.

    டம்ளர் ஏரியா ஹாஸ்பிட்டல் ஒரு மீடியம் சைஸ் ஹாஸ்ப்பிடல். 35 பெட் இருக்கும். ஆபரேக்ஷன்கள் டெய்லி நடக்கும். டம்ளர் ஊர் மக்கள் ஏதாவது எமர்ஜென்சினா நம்மக்கிட்ட தான் வருவாங்க. அவசர சிகிச்சை இரவு டூட்டியில் இருந்தேன். லீவ் போடாத நாட்கள். பேக்ஷன்ட் இல்லாமல் தூங்கிய சில இரவுகள். சொட்டு தூக்கம் கூட இல்லாமல் முழித்திருந்த பல இரவுகள். 

   நமக்கு என்ன வேலைன்னா, நைட் 9 மணிக்கு போவேன். மதிய டூட்டி பாக்குற Dr. வேப்பங்குச்சி, பெண்டிங் இருக்கிற பேக்ஷன்ட்ஸ் எல்லாரையும் பாத்து முடிச்சிட்டு, அப்புறம் வார்டு, ஐசியூ மற்றும் எமர்ஜென்சில இருக்குற பேக்ஷன்ட்ஸ் பத்திய டீடெய்ல் எல்லாத்தையும் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு கிளம்புவார்.

   "சரிங்க சார். டாட்டா. இன்னைக்கு பொங்கல் ஆச்சே...நைட் ஃப்ரென்ட்ஸோட பார்ட்டியா?" கண்சிமிட்டி கேட்டேன்.

   "அடப்போய்யா நீ வேற. பொண்டாட்டி தொல்ல தாங்கல. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது. சினிமாக்கு கூட்டிட்டு போகணுமாம். இங்க டூட்டி பாத்துட்டு, செகண்ட் க்ஷோ போய் மொத பாட்டு வரை முழுசிட்டிருப்பேன். குழந்தைங்களும் தூங்கிடுங்க. அப்புறம் என்னை அவ இன்டர்வெல்லுக்கு எழுப்புவா. அவளுக்கு ஒரு கார்ன் பஃப்ஸும் ஃபான்ட்டாவும் வாங்கி கொடுத்துட்டு திரும்பி நான் தூங்க ஆரம்பிச்சுடுவேன். அதுல பாரு விஜய் படம்னா, நான் ஒபனிங் சாங் பாடி, வில்லணுங்களை அடிச்சு துவைக்கிற மாரி கணவு கண்டு, திரும்ப அவ எழுப்பும் போது பெருமையோட எழுந்திருப்பேன். எழுந்து எல்லாரையும் பைக்ல (அப்போ தூக்கம் முழுசா தெளிஞ்சுரும்) ஏத்திக்கிட்டு வீட்டுக்கு போவோம். போரிங் லைஃப் தம்பி. ஒகே. வரேன்"

   "பை பை வேப்பங்குச்சி சார். குட் நைட்" (தினமும் இவர் மொக்கைலேந்து எஸ்கேப் ஆகவே கால் மணி நேரம் ஆவுதே)

   அப்புறம் ரவுண்ட்ஸ் போய், வார்ட்ல இருக்குற எல்லா பேக்ஷன்ட்ஸையும் ஒரு தடவை பாத்துடுவேன். இல்லாட்டி மிட்நைட்ல அங்க வலிக்குது, இங்க வலிக்குதுனு எழுப்பி விட்ருவாங்க. இப்பவே பாத்துட்டோம்னா "டாக்டர் செக் பண்ணினாரு, நமக்கு ஒன்னுமில்ல"னு நிம்மதியா தூங்குவாங்க.

   அப்புறம் நம்ப கூத்து ஆரம்பிக்கும். நான் அங்க என்ன கண்டுபுடிச்சேன்னா, டம்ளர் ஊர் மக்கள், நைட் 9-10 மணிக்கு சாப்பிட்டு தூங்குவாங்க. அப்போ நம்பளுக்கும் ரெஸ்ட். 10 மணிக்கு அப்புறம் தான் லாரிக்கு அடியில சிக்கிப்பாங்க, இல்ல ஹார்ட் அட்டாக் ஆவாங்க, இல்ல ஜுரம் வரும், அப்புறம் இங்க வருவாங்க. 11 மணிக்கு மேல யாரும் வரமாட்டாங்க. கொஞ்சம் தூங்கலாம். நைட் 3 மணிக்கு கண்டிப்பா யாராவது வருவாங்க. முன்னாடி நாள் சாயங்காலத்துல இருந்தே உடம்பு சரியில்லாம இருக்கும். நாளைக்கு பாத்துக்கலாம்னு விட்ருவாங்க. நைட் ஃபுல்லா தூங்காம, சரி போய் டாக்டர பாப்போம்னு இங்க வருவாங்க.

    அன்னைக்கு பொங்கல்கறதுனால, எந்த பெரிய டாக்டரும், முந்திரிப்பருப்பே வந்தாலும் வரமாட்டாங்க. (தமிழக பவர்ப்ளேயில் மேலிருந்து கீழ்- மேலே- பாதாம், அப்புறம் முந்திரி, பிஸ்தா, கடலை, கீழே உள்ளவர் உளுத்தம்பருப்பு). Dr. வேப்பங்குச்சிக்கிட்ட ஹான்ட்ஓவர் வாங்கிகிட்டு, பேக்ஷன்ட்ஸ் பாத்துக்கிட்டு இருந்தோம். அன்னைக்கு சிட்டில முக்காவாசி டாக்டர்ஸ் லீவுங்கறதுனால பயங்கர கூட்டம். ரவுன்ட்ஸ் போகலை.

    திடீர்னு பினு நர்ஸ் முழு வயித்த தள்ளிக்கிட்டு, " டாக்டர். உடனே 19ம் நம்பர் ரூமுக்கு வாங்க. பேக்ஷன்ட் சொந்தக்காரங்க பயங்கரமா தகராறு பண்றாங்க"ன்னா.

   டக்குனு எழுந்து " சிஸ்டர், 9 மாச ப்ரெக்னட்டா இருக்கும் போது நீங்க இப்படி ஒடி வந்து டென்க்ஷன் ஆகக்கூடாது. நான் அங்க போறேன். வாங்க"

   8 செகன்டில் பேக்ஷன்ட் ரூமில் இருந்தேன். 20 பேர் பேக்ஷன்ட்டை சுத்தி நின்னு கத்தினாங்க. பேக்ஷன்ட் வலியில என்னை பாக்குறார். நான் கேஸ் க்ஷீட்டை அமைதியா படிச்சுக்கிட்டுருந்தேன். பேக்ஷன்ட் பெயர் கொக்குவாய், 54 வயது ஆண் , கிட்னி பெயிலியர், இரண்டு உள் தொடைலையும் பெரிய புண் (தொடையில் மட்டும் தான்). புண் ரொம்ப வலியாகி இன்னைக்கு (பொங்கல்) அட்மிட் ஆயிருக்காரு. ஹாஸ்பிட்டலின் ஒரு ஒனர், Dr. சூப்பர் கவுச்சி சொல்லி இங்க அட்மிட் ஆயிருக்கார் (ஹாஸ்ப்பிட்டல் லைசென்ஸ் வாங்க கடலபருப்புக்கு, கவுச்சி நிறைய செஞ்சிருக்கார்). சுத்தி உள்ளவங்க நம்மளை மொறச்சு பாத்திட்டுருக்காங்க.

    நான் எல்லாரையும் பொதுவா  பாத்து, "ஹலோ. என்னாச்சு? அந்த வார்ட் டூட்டி நர்ஸை மிரட்டிருக்கீங்க. அவங்களுக்கு 9 மாசம். நீங்க அவங்களை கத்தி, அவங்க டென்க்ஷன் ஆனா என்னாகும் தெரியுமா? 10 நாள்ள பொறக்கப் போற குழந்தை அபார்ட் ஆயிடிச்சுனா உங்க எல்லாரையும் எந்தத்தடை வந்தாலும் 10 வருக்ஷம் உள்ள வச்சிருவேன். அதுக்கான பவரும் தைரியமும் எனக்கு இருக்கு".

    ஒரு 33 வயது பெண், கலைந்த முடி, சுடிதாரோடு, "சார். நாங்க பிரச்னை பண்ல. என் அப்பா வலி, வலின்னு 4 மணி நேரமா   துடிக்கிறாரு. ஒரு டாக்டரும் வந்து பாக்கல. ஒரு ஊசி கூட போடல. என் அப்பா இந்த டம்ளர் ஏரியா கடலப்பருப்பு. அவருக்கு ஏதாவது ஆச்சுனா, உங்க ஹாஸ்ப்பிடல இழுத்து மூட வச்சிருவேன்"

  "ஹலோ மேடம். சும்மா கத்தாதீங்க. கடலபருப்புனா பெரிய இதா? சும்மாயிருங்க....."

    (ரூமை விட்டு வெளியே போய், போனை எடுத்து, Dr. சூப்பர் கவுச்சிக்கு டயல் பண்ணினேன்) "குட் ஈவினிங் கவுச்சி சார். நான் அல்கேட்ஸ் பேசறேன். மிஸ்டர் கொக்குவாய் பேக்ஷன்ட்ட இன்னிக்கு அட்மிட் பண்ணியிருக்காங்க. பொங்கல் அன்னிக்கு சிக் (அப்படின்னா சாகக்கூடிய) பேக்ஷன்ட்டை இங்க ஏன் சார் அட்மிட் பண்ணீங்க? ப்ளீஸ் வாங்க சார். பிரச்னை ஆகும் போலருக்கு. "

  "அல்கேட்ஸ், இன்னிக்கு பொங்கல். நான் டிகாலோ ஹோட்டலில் நம்ப ஹாஸ்ப்பிட்டல் ஒன்ர்ஸ்ஸோட முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் (அப்படின்னா சரக்கு). என்ன பிரச்னை?"

   "சார். ஒரு நர்ஸை அடிக்க வந்தாங்க. எனக்கு கோவம் வந்திருச்சி. கண்டபடி திட்டிட்டேன்"

  "அல். அவரு நம்ப ஏரியா கடலப்பருப்பு, நினைச்சா நம்ப ஹாஸ்ப்பிடல ஒரு செகன்ட்ல மூடிடுவார்"

  "ஓ அப்படியா சார்? ஒகே சார். அவரை 4 மணி நேரமா எந்த டாக்டரும் பாக்கலை. மதிய டூட்டி டாக்டர் எமர்ஜென்சில பயங்கர பிஸி. இங்க எட்டி கூட பாக்கலை. இப்போ புண் இருக்கிற இடத்துல பயங்கர வலியாம். பிபி 180/90. ஜாஸ்தியா இருக்கு. ஸ்ட்ராங் பெயின் கில்லர் ஊசி போடவா? கொஞ்சம் வலி குறையும்"

  "அல். அவர் கிட்னி பெயிலியர் பேக்ஷன்ட். வலி ஊசி போட்டா, இருக்குற கிட்னியும் முழுசா கெட்டுடும். சும்மா பாரசிட்டமால் ஊசி போடு. நாளைக்கு காலைல நான் வரேன்"

   "ஒகே சார். குட் நைட் சார்"

   பேக்ஷன்ட்டை மேனேஜ் செய்துட்டு, எல்லாரையும் சமாதானப்படுத்திட்டு,  ஒரு வழியா 11 மணிக்கு வெயிட் பண்ணிட்டிருக்கற பேக்ஷன்ட்ஸ் எல்லாரையும் பாத்து அனுப்பிட்டு நைட் 12 மணிக்கு நம்ம சேரிலேயே சாப்பிட உக்காந்தேன். 5 பேக்ஷன்ட்ஸ் படுத்துக்கிட்டு இருப்பாங்க. அங்கயே தான் டிபன்.

   ஒரு இட்லி உள்ள போயிருக்கும். ஒரு மீசை பேண்ட் சட்டை ஆள் பதறி ஒடி வந்தார். " சார் சார் சார், அந்த பேக்ஷன்ட் சிக் ஆயிட்டாரு. ஒடியாங்க சார்"

   (அய்யயோ) 3 செகன்டில் அவர் ரூமில் இருந்தேன். அவர் வயிறு கொஞ்சம் உப்பியிருந்தது. ஒரே சுத்தி இருந்தவங்களின் கத்தல், அழுகை, ஒப்பாரி சத்தம்.

   ஒரு லுக்லேயே தெரிஞ்சுது. மூச்சு இல்லை.

  இவர எப்படியாவது காப்பாத்தணுமே.."ஈடி(ET) ட்யூப் குடுங்க. ஸைலோகெய்ன் ஜெல்லி எடுங்க. டிஃபிப்ரிளேட்டர் (defibrillator) கொண்டாங்க. கிளவுஸ் எடுக்க இவ்ளோ நேரமா? ம்ம். ஈடி ட்யூப் போட்டாச்சு. ஆம்பு பேக் (ambu bag) குடுங்க. கமான், சி.பி.ஆர் ஆரம்பிங்க". அந்த மீசை (டயாலிசிஸ் டெக்னீசியன், விவரம் தெரிஞ்சவர்) பெட் மேல் ஏறி முட்டிக்கால் போட்டு கடலபருப்பின் நெஞ்சை அமுக்க ஆரம்பித்தார். பெட் மேலேயும் கீழேயும் அசைந்தது. நான் ஆம்பு பாக்கால் ஆக்ஸிஜன் செலுத்த ஆரம்பித்தேன். இதய துடிப்பும் ஆரம்பிக்கவில்லை. "ஒகே. டிஃபிப் ஆரம்பிக்கலாம். 250 வோல்ட் வைங்க...ம்ம் எல்லோரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க". டக். க்ஷாக்கில் உடம்பு அதிர்ந்து அடங்கியது. "ஸ்டில் நோ ஹார்ட் பீட். ஒகே 350 V வைங்க. அட்ரினலின் இன்ஜெக்க்ஷன் ரெடி பண்ணுங்க"

    (15 நிமிடம் போராடிய பின்) "ஒகே. ஸ்டாப். ஈடி ட்யூபை எடுத்துடுங்க. பெட்க்ஷீட்டை போத்துங்க"

      வெளியே கடலைபருப்பின் மகள், கண் டபுள் சைசில், வாய் பெரிதாக நான் சொல்லப்போவதை கேட்கத் தயாரானாள்.

             " மேடம். எவ்வளவோ ட்ரை பண்ணினோம். அவர் இறந்துட்டார்"


------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------

   "ஐயோ, ஐயோ ஐயோ. அப்பாஆஆஆஆஆ" என்று அவர் மேல் விழுந்தாள்.

   நான் தலை குணிந்து கொண்டே எமர்ஜென்சி சென்றேன். அங்கே மூனு அவசர பேக்ஷன்ட்ஸ் வந்திருந்தார்கள்.

   அதில் ஒருவருக்கு ஈசிஜி பார்த்தால், ஹார்ட் அட்டாக்!!! இவரைக் காப்பாத்தணுமேன்னு அங்கே ஃபுல்லா மூழ்க்கிட்டேன்.

   அந்த பேக்ஷன்ட்ட மேனேஜ் பண்ணிட்டு இருக்கும் போது பாத்தா, ஒரே சத்தம். டமார், டுமீர்ன்னு. கடலபருப்பு சொந்தக்காரங்க ஹாஸ்ப்பிட்டலை ஒடைக்க ஆரம்பிச்சுட்டாங்க.  நான் உடனே அந்த ப்ரெக்னன்ட் நர்ஸை ஒரு ரூமிலே போட்டு பூட்டிட்டு, அந்த ஹார்ட் அட்டாக் பேக்ஷன்ட் பக்கத்துல ஒரு சிரின்ஞ்சோட நின்னேன். 

    50 பேர் உள்ள கூட்டம்  உள்ளே வந்தது. நான் இடுப்புக்கு மேல் திரும்பினேன் (அத்தனையும் 20-30 வயது ஆண்கள், கண்களில் வெறியோட)

   "என்ன?"
  "கடலப்பருப்பை இப்படி கவனிக்கலாமயே கொண்ணுட்டீங்களேடா பாவிகளா"

   "ஹலோ. அவர் கிட்னி பெயிலியர்ல செத்தார். உங்களால் ஒரு நர்ஸ் கிட்டத்தட்ட அபார்ட் ஆகியிருப்பாங்க. இங்க பாரு. ஹார்ட் அட்டாக் பேக்ஷன்ட். என்னை வேல செய்ய விடு. ரூமை விட்டு வெளியே போ" என்று ஹை டெசிபலில் கத்தினதில் அப்படியே வெளியே போய் டமார் டமார் டமார்.

 நான் அவருக்கு இன்ஜெக்க்ஷன் போடுவது போல் குணிந்து நடிச்சிட்டிருந்தேன். அந்த பேக்ஷன்ட்டோட ரிலேட்டிவ்வும் நெலவரத்தை புரிஞ்சிக்கிட்டு ஒத்துழைச்சாங்க.

---------------------------------------------ஒரே அமைதி---------------------------------------------------

   "டாக்டர் அந்தக் கும்பல் எல்லாத்தையும் உடச்சிட்டு இப்போ வெளியே போயிருக்கு. 10 நிமிக்ஷத்தில திரும்பி வந்திரும்" மீசை டெக்னீக்ஷியன்.

   " SI க்கு ஃபோனைப்போடு. லா அன்ட் ஆர்டர் ப்ராப்ளம் ஆயிடும், உடனே வாங்கன்னு சொல்லு. கவுச்சிக்கு ஃபோன் போட்டு, 3 ஒனரையும் 5 நிமிக்ஷத்தில இங்க வரணும்னு சொல்லு"

    10 நிமிக்ஷம் கழிச்சு, சிவந்து வீங்கிய கண்களுடன் ஒனர்கள்.

    "கேட்ஸ், என்னாச்ச. எல்லாத்தையும் அடிச்சு உடச்சிருக்காங்க??"

  "கவுச்சி சார், ஏன் சார் பொங்கல் அன்னைக்கு சிக் கேஸை அட்மிட் பண்ணீங்க? நீங்க யாரும் வரமாட்டீங்கல்ல!!"

   "இல்ல அல். அவர் எனக்கு ரொம்ப தெரிஞ்சவர். அதனால தான்"

   "ஒகே சார். நான் என்ன செய்யணும்?"
  "அங்க பார். அந்தக் கும்பல் திரும்ப வருது. இன்ஸ்பெக்டரும் வரார். சமாளி. நானும் ஒனர்ஸும் அந்த ரூமில இருக்கோம்" (அடப்பாவிங்களா....)

   "ஒகே சார்"

   (நல்ல வேளை போலீஸ் வந்தாச்சு. தலை தப்பிச்சுதுறா சாமியோவ்)

    SI "என்னாச்சு. அவர் ஏன் இறந்தார்?"

   நான் என் சீட்டில் உக்காந்தபடி "சார், அவருக்கு கிட்னி பெயிலியர். தொடைல புண்ணு வந்து அட்மிட் ஆனார். திடீர்ன்னு கார்டியோ ரெஸ்ப்பிரேட்டரி அரெஸ்ட் (என்ன வியாதின்னாலும், வயசாகி இறந்தாலும் மூச்சும் இதயமும் நின்னு போகும்ல. அதான். ஆனா கேக்கறத்துக்கு ஹார்ட் அட்டாக் மாரியே டெரரா இருக்கும்) வந்து இறந்துட்டார். 20 நிமிக்ஷம் போராடினோம். ப்ச். " என்று தலைய லெஃப்ட் டு ரைட்டாக ஆட்டினேன்.

    அந்தப் பெண், " அவர் பொய் சொல்றார். இதை என்க்கிட்ட சொல்லவே இல்ல"

   நான் "மேடம், அந்த டயத்துல நாங்க அவர காப்பாத்த தான் பாப்போம், உங்களுக்கு ஃபுல்லா எக்ஸ்ப்ளெயின் பண்ணி டயத்த வேஸ்ட் பண்ண மாட்டோம்"

   "இல்ல நீங்க எல்லாருமா சேந்து அவர சாகடிச்சீங்க"

  நான் SI யிடம் "சார். இவர் எதனால இறந்தார்னு கண்டு பிடிக்கணும்னா, உடனே போஸ்ட் மார்ட்டம் பண்ணணும். உடனே GH கொண்டு போங்க"

  SI அந்தப் பெண்ணை பாக்க, பொண்ணு கூட்டத்த பாக்க, கூட்டம் ஒருத்தர ஒருத்தர் பாக்க......

   மயான அமைதி. அது டமார், டுமீர் சவுண்ட விட சத்தமா இருந்திச்சி.

   கூட்டம் வெளியே போய் டிஸ்கஸ் செய்து 5 நிமிடம் கழித்து உள்ளே வந்தது.

  நான் "SI சார், உடனே போஸ்ட் மார்ட்டம் எடுத்துட்டு போங்க. எனக்கும் காரணம் தெரியணும்"னேன்

   பொண்ணு "இல்ல........ வேண்டாம்" னாங்க. எல்லாரும் அமைதியாய் கீழே குணிந்தபடி, என்னை பாத்துக்கொண்டே கலைந்தார்கள். நான் பாக்கி 4 இட்லியை சாப்பிட ஆரம்பிச்சேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு:

1. போஸ்ட் மார்ட்டம் செய்யல. அடுத்த 15 நிமிக்ஷத்துல மிக மிக அமைதியாக ஹாஸ்ப்பிடல் பில் செட்டில் செய்து மொத்த கூட்டமும் சைலன்ட் மோடில் பாடியோடு வெளியேறியது

2. கடலப்பருப்பு, பழைய உயிலில் அந்த பொண்ணுக்கு சொத்து எழுதி வைக்காமல் இறந்து விட்டார். அதான் அந்த பொண்ணுக்கு கோவம். அவரு உயிர் பொழப்பாரு, அப்பாக்கிட்ட சொல்லி உயிலை மாத்தி, கொஞ்சம் சொத்து எக்ஸ்ட்ரா வாங்கலாம்னு நெனப்பு. ஒரு ருவா கிடைக்கலியாம். அண்ணன் தம்பிங்க எல்லாத்தையும் புடுங்கிட்டாங்கலாம்.

3. அமைதி எற்படுத்திய ஒரு SI, 5 கான்ஸ்டபிள்களுக்கு, தலா நூறு ருபாய் கொடுக்கணும்னு கவுச்சி சொல்ல, நான் "சார், டோட்டலா 10000 ருபா குடுங்க சார். நம்ம ஹாஸ்ப்பிடலையே காப்பாத்தியிருக்காங்க" ன்னேன். (கடசியா, இன்ஸ்க்கு 1000, மத்தவங்களுக்கு 100)

4. அவர் வலி தாங்காம துடிச்சப்போ, எல்லாரும் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமா நிறைய தடவ குடிக்க தண்ணி கொடுத்திருக்காங்க. பினு சிஸ்டர், "கிட்னி பெய்லியர் பேக்ஷன்ட்டுக்கு தண்ணி குடுக்க கூடாது"ன்னு கத்தியிருக்காங்க. அதான் அவங்களுக்கு செம திட்டு. அப்புறம் அவ்ளோ தண்ணி குடிச்சதுல யூரின் போகணும்னுருக்கார். "சிக் பேக்ஷன்ட் படுக்கைய விட்டு எந்திருக்கக் கூடாது, இல்லாட்டி கொலாப்ஸ் ஆயிடுவார், இருங்க பெட் பேன் (Bed pan) வைக்கச் சொல்றேன்"னு சொல்லிருக்கு. கேக்காம அவங்க படுத்த படுக்கயா இருந்தவரை பாத்ரூமிலே நிப்பாட்டிருக்காங்க. யூரின் பாஸ் பண்ணிக்கிட்டே சரிஞ்சவர் தான். பேச்சு மூச்சு இல்லை. அப்படியே பெட்ல கொண்டு வந்து போட்டாங்க. பினு, 2 நாள் கழிச்சு இதை என்க்கிட்ட சொல்றாங்க. " வாட். வேகல் க்ஷாக் (vagal shock)? "என்னமா நீ? இப்போ சொல்ற!!! அப்பவே சொல்லிருக்கக் கூடாதா? அவங்களால தான் அவர் செத்தார்னு அன்னைக்கு தைரியமா சொல்லிருப்பேனே..ச்ச"ன்னேன். "நீங்க தான் என்னைக் காப்பாத்த ரூமிலே வச்சு பூட்டிட்டீங்களே"ன்னாங்க பினு. 

5. Dr. வேப்பங்குச்சி காலி. சினிமாக்கு போய் தூங்கிட்டு வந்தவரை வாசல்லியே சம்பளம் செட்டில் பண்ணி அனுப்பிட்டாங்க (ஏன்னா, அன்னைக்கு அவர் ஒரு தடவை கூட ரவுண்ட்ஸ் போகல). அவரு அப்புறம் சிங்கப்பூர் போய்ட்டார்.

"குரங்குப்பேட்டை மாரி சிட்டில, பொங்கல், தீபாவளி, ஞாயித்துக்கிழம, எந்த பெரிய டாக்டரும் வரமாட்டாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அப்பவும் Dr. கவுச்சி இவரை இங்க அட்மிட் பண்ணி சாகடிச்சிட்டாரு" என்னோட மைண்ட் வாய்ஸ்.

     கவுச்சி மத்த  ஒனர்களிடம், " இந்த இன்எக்பிரியன்ஸுடு டூட்டி டாக்டர் (நான்) கடலப்பருப்ப சாகடிச்சு, ஹாஸ்ப்பிடல் பேரை கெடுக்கப் பாத்தான்"

     ஆனா, என் மூஞ்சிக்கு நேரா, நான் தப்பு பண்ணினேன்னு எவருக்கும் சொல்ல தைரியம் வரல.

     இந்த வேலை என் மயிருக்கு சமானம்னு ஒரு மாச நோட்டிஸ் கொடுத்தேன். கடல பருப்புக்கு இறந்தாலும் பவர் இருக்கு.

----------------------------------------------------------------------------------------------------------------------

                 இக்கதையில் வரும் பெயர்களும், சம்பங்களும் கற்பனையே. 

----------------------------------------------------------------------------------------------------------------------


 

6 comments:

  1. காமெடியாக தெரிந்தாலும் உள்ளே நடக்கும் விஷயங்கள் நிஜத்துக்கு அருகி இருக்கிறது. அருமை ஹரி..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Around the world this only this is hapening Hari! The Manage(r)ment will take wrong decisions and finally this will fall on people reporting to him!

    ReplyDelete
  3. All the field same tension as a doctor u have more risk because of uyiru

    ReplyDelete
  4. Dr. Boopathi1/7/13 4:08 AM

    everyone during dutydoc days definitely gets an experience like this.. 'autopsy' is an useful weapon indeed.. :D

    ReplyDelete
  5. வெளியில் இருந்து பார்க்கும் என்னை (எங்களை) போன்ற பாமரர்களுக்கு தி அதர் சைடு ஆப் தி ஸ்டோரி தெரியவே செய்யாது. I(we) always use to think that being a doctor is very easy and comfortable...i mean, "of course படிக்கறது கஷ்டம் but படிச்சி முடிச்சிட்டா அப்புறம் easy going life" அப்படி ன்னு. Very nice article telling the tale of medical profession. இவளவு அமளி கமலி aa before you can eat your 5 idlis :( But i mean, i had a hard time trying to visualise which place is kurangupettai and what could be dr veppankuchi's real name. :)

    ReplyDelete