இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Saturday, June 15, 2013

பயமா... எனக்கா...சேச்சே...கொஞ்சூண்டு


நன்றி In & Out magazine
வணக்கம் சாமியோவ்....

Blog ஆரம்பி, ஆரம்பின்னு பல request களினால் (வேற யாரும் இல்ல. நானே எனக்கு பல முறை request பண்ணினேன்) இந்த இனிய ஏழரை நாளில் ஆரம்பிக்கிறேன்.

அப்படியே கொஞ்சம் பின்னாடி போவோம்

ட்ரைங்ங்ங்ங்ங்.......


  Medical college-Day-1

     காலைல சீக்கிரம் எந்திரிச்சு, குளிச்சு, சாமி கும்பிட்டு, ட்ரெஸ் பண்ணியாச்சு. நம்ம அக்கா வூட்டுக்காரர், டாக்டர். பழைய புக்ஸ், நோட்டு, ஒரு பெரிய ஃபுல் வெள்ளை கோட்டும் குடுத்திருந்தார். கோட்டை அப்டியே ஸ்டைலா தோள் மேல போட்டுக்கிட்டு நம்ம கிராமத்தோட பஸ் ஸ்டாண்டுக்கு போனேன். வழில எல்லாரும் நம்பளையே பாக்குறாங்க, இவன் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட் ஆயிட்டானானு. அப்படியே உடம்பெல்லாம் புல்லரிக்கிது. பஸ் லேட்டா வராதா, நம்பளையே எல்லாரும் ஆச்சரியமா பாக்கமாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன். பஸ் வந்து ஏறி உக்காந்தா, அங்கேயும் ''ன்னு பாக்கறாங்க. அப்டியே பட்டாம் பூச்சி பறக்குது

       பக்கத்துல உக்காந்தவர் பக்கத்தூர்காரர். "தம்பி என்ன படிக்கிறீங்க?" ன்னார் ,  "medicine பன்றேன் சார்" (டேய் இன்னும் மொத நாளே காலேஜ் உள்ள போவல. அதுக்குள்ள பீத்தல் ஸ்டார்ட்டா?). 

          காலேஜ் உள்ள போய், கிளாஸ் கண்டு புடிச்சு உக்காந்தேன். உக்காந்திருந்த எல்லாரும் நம்மள மாரி பக்கிங்க தான். அது தெரியாம யாரோடையும் பேசாம உக்காந்திருந்தேன். அன்னைக்கு காலைல 3 பீரியடும் அனாடமி, பிஸியாலஜி, பயோகெமிஸ்ட்ரி. வாத்தியாருங்க வந்து காலேஜ்ல என்ன பண்ணனும், அவங்க சப்ஜெக்ட் எப்படினு பேசிட்ருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா நாங்க ஸ்டுடன்ட்சும் இன்ட்ரோ ஆயிட்டு இருந்தோம். ஒரு பத்து பைனஞ்சு நார்த் இந்தியன் பசங்க பொன்னுங்க இருந்துதுங்க. 2 சைனீஸ் பொன்னுங்க வேற, ஸ்டைலா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு. வாய்ல போறது தெரியாம பாத்திட்டிருந்தோம்.

       டிசெக்க்ஷன் ஹால் போங்கப்பானு சொல்லிட்டாங்க. மொதல்ல ஒரு ரூம்ல உக்கார வச்சாங்க. என்னடான்னு பாத்தா ஒரு எலும்புக்கூடு தொங்குது. அப்படியே எல்லாருக்கும் வயித்துக்குள்ள காத்து ரொப்பிக்கிச்சு. ஒருத்தன ஒருத்தன் பாத்துக்குறான். அந்த சைனீஸும் பாத்துக்குதுங்க. சைனாலையும் பேய் இருக்கு போல. ஒரு வாத்தியார் வந்து இந்த வருக்ஷம் டிசெக்க்ஷன் என்னலாம் பண்ண போறோம்ன்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. "யோவ். உன் பின்னாடி எலும்புக்கூடு தொங்குதுயா" ன்னு எல்லாருக்கும் சொல்லனும்னு தோனுது. அவரு அதை கண்டுக்கவே இல்ல. அது வேற வாய பொலந்துகிட்டிருக்கு. நம்மள பாத்து சிரிக்கிற மாரி. லைட்டா மழ குளிர் வேற. ரூமும் கொஞ்சம் இருட்டு வேற. யம்மா. உடம்பு லைட்டா நடுங்குதே. அந்தாளு எதையோ சொல்லி முடிச்சார்.

           அப்படியே நடுங்கிக்கிட்டே டிசெக்க்ஷன் ஹால் போனோம். ஒரு டேபிள்ள என்னமோ கெடக்குதே? என்னனு பாத்தா பச்ச கலர்ல அறுத்து போட்டு ஒரு பொணம். உள்ள ஒன்னுமே இல்ல. எலும்புக்கூட்ல கொஞ்சம் சதை இருக்கு. அவ்ளோ தான். ஒன்னுக்கு வந்திரிச்சி. எல்லாருக்கும் தெரியும் MBBSனா டெட்பாடில்லாம் பாக்கனும்னு. ஆனா இப்படியா! மூஞ்சிக்கு பதிலா கயறு கயறா கிடக்கு (அது போன வருக்ஷம் ஸ்டுடன்ட்ஸ் ஃபுல்லா டிசெக்ட் பன்னின பாடின்னு பின்ன தெரிஞ்சுது). இன்னோரு அனாடமி வாத்தியாரம்மா வந்தாங்க. "வாங்க போய் பாக்கலாம்"னாங்க. என்னாது கிட்ட போய் பாக்கனுமா??? டேய் அல்கேட்ஸ், காலைல பெருசா ரோட்ல கோட்ட தொங்க போட்டுட்டு வைரமுத்து மாரி நின்னியே? அதுக்கு இதெல்லாம் பண்ணனுமா? ன்னு மைன்ட் வாய்ஸ் வேற. திரும்பவும் ஒருத்தன ஒருத்தன் பாக்குறான். எவனும் கிட்ட போகல. அனாடமி அம்மா ஒரு சவுண்டு வுட்டுது பாரு, டக்குடக்குனு எல்லாரும் டேபிளை சுத்தி நின்னோம். எல்லோருக்கும் மூஞ்சி வெளுத்துடிச்சி. கீழ பாத்தா, பச்ச கலர்ல அது கிடக்கு. ஏதோ கெமிக்கல் நாத்தம் வேற. ஒரே நெடி, கண்ணெரிச்சல், கொஞ்சம் இருமல். அந்தம்மா கம்பீரமா நிக்கிது. "இது ஃபார்மலின் ஸ்மெல். அப்படி தான் இருக்கும். போக போக பழகிடும்". என்னாது பழகிடுமா? அப்ப வருக்ஷம் பூரா இதோட தான் இருக்கனுமா. அர்ஜன்ட்டா சுச்சா வேற போனும். கேட்டா அடிப்பாங்களோபாடி கெட்டு போகாம இருக்க ஃபார்மலினை ஒரு தொட்டிக்குள்ள ஊத்தி அதுல முக்கி வெச்சிருப்பாங்களாம். அதான் பச்சையா இருக்காம். ஒரு சொட்டு ரத்தம் கூட இல்ல. ஒரக்கண்ணால லைட்டா பாத்தேன். ஹை காதும் கண்ணும் இருக்கு. அட நகமும் இருக்குப்பா. அந்தம்மா ஏதோ கூவிகினு இருந்தாங்க.  

       ஒரு பொண்ணு தைரியமா எதையோ காட்டி "இது என்னா"னிச்சி. அதுக்கு மேடம் "அதான் நெர்வ். மூளைலேந்து மெசேஜ் எடுத்துட்டு போவும்"ணு சொல்லிச்சு. பார்ரா எவ்ளோ தைரியமா நிக்கிறது மட்டும் இல்லாம டவுட்டு வேற கேக்குது இந்த பொண்ணுனு நெனச்சேன். நம்மளும் கேக்கலாமேன்னு "இது என்ன மேடம்" ன்னேன். "கிட்னி" ன்னாங்க. பின்னாடி ஒருத்தன் தொப்புனு விழுந்தான்.



11 comments:

  1. வாழ்த்துக்கள் அய்யா, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் கட்டுரை படித்த மகிழ்ச்சி, உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி பாலாஜி. மத்ததெல்லாம் பாத்தீங்களா?

    ReplyDelete
  3. great ...i m following this bloggggggggggggggggggggggg

    ReplyDelete
  4. பாஸ் தமிழுக்கு வாங்க பாஸ். அப்ப தான் நல்லா கலாய்க்கலாம்

    ReplyDelete
  5. In the beginning you will afraid of this, later we will afraid of Doctors!!

    ReplyDelete
  6. nice one..

    15 people fainted on our first day.. still we mock them.. :)

    ReplyDelete
  7. Pinnarenga hari .......nala flow...read everything and enjoyed with laughter

    ReplyDelete
  8. இன்றுத் தான் அறிமுகமானது உங்ஙள் வலைப்பூத் தளம்.இத்தனை நாள இதை தவரவிட்டதற்கு வருந்துகிறேன்.மிக அருமை.

    ReplyDelete
  9. innaiku fulla udkandhu unga athana postum padichuten...
    sirichu siriche vayiru valikudhu..
    olunga medicine sollirunga..fees la thara mudiyadhu..

    ReplyDelete