இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Tuesday, July 2, 2013

என்ன? லைசென்ஸ் இல்லயா? சரி 200 ருவா எடு



 நன்றி அதீதம்.com

எங்க தாத்தாவிடம் ஒரு ஹீரோ மெஜஸ்டிக் இருந்துது. நான் ஏழாவது படிக்கிறப்போ, அவர் இல்லாத நேரத்துல சைக்கிள் மாதிரியே பெடல் போட்டு அதை ஓட்டுவேன். சைடு லாக்கா? அட அந்த வண்டில குழவி கூடு கட்டிருந்துச்சு. அந்த அளவுக்கு அவர் மெயின்டெய்ன் பண்ணினார்.
ஒரு நாள் அந்த வண்டிய பெடல் போட்டு ஓட்டும் போது, என்னடா பிரேக் கைப்புடி மாதிரி கீழ ஒன்னு இருக்கேன்னு, புடிச்சேன். வண்டி ஸ்டார்ட் ஆயிடிச்சி. கடவுளே, வண்டிக்கு சாவியும் கெடயாதா?
கொஞ்ச தூரம் ஓட்டிட்டு, ஒரு செங்கல் முட்டு மேல மோதி, பார்க் பண்ணினேன். நீ கார்ட் (knee guard-அதாங்க பம்ப்பர்) புட்டுக்கிச்சி. சரி இனிம தாத்தா வண்டிக்கு, நீ கார்டும் கெடயாதுன்னு, வீட்டுல ஒரங்கட்டிட்டு தூங்கப் போயிட்டேன். தாத்தா, இத யார் ஒடச்சதுனு தெரியாம பொதுவா நின்னு, கெட்ட வார்த்தைல திட்டிக்கிட்டு இருந்தார்.


பத்தாங் க்ளாஸ் படிக்கிற வரையும் ஸ்கூட்டர், டிவிஎஸ் எல்லாம் கெடக்கிறப்போ ஒட்டினேன். ஊராளுங்க நெறய பேரு, வீட்டுக்கு வந்து, பயங்கர கம்ப்ளைன்ட்.
லெவன்த்துல, நமக்கே நமக்குனு ஒரு டிவிஎஸ் 50. அத ஓட்டிக்கிட்டு ஸ்கூல் போகும் போது ஒரு பைக்க இடிச்சிட்டு ஒடிட்டேன். அவர் ஸ்கூல் யூனிஃபார்ம், வண்டி கலர வச்சு, நேரா ஸ்கூலுக்கு வந்து விசாரிக்கிறார். அப்படியே பொறி கலங்குது. அப்புறம் ஒரு டீச்சர் பஞ்சாயத்து பண்ணி வச்சார்.
ஒரு நாள் சாயங்காலம் சும்மா ஊர சுத்தும் போது, “வண்டிய ஒரங்கட்டு, லைசென்ஸ், ஆர் சி புக்க எடுன்னு டிப்டாப்பா டிராஃபிக் போலீஸ் மறிக்குறார். பக்கத்துல வேற டிசைன்ல தொப்பி, கூலிங் க்ளாஸ் போட்டு, டிராஃபிக் சார்ஜெண்ட் வேற.
சார், இல்லை சார்
கான்ஸ்டபிள், என்ன பண்ற?”ன்னார்.
xxxx ஸ்கூல்ல லெவன்த் படிக்கிறேன் சார்
உன்னும் மீசையே மொளைக்கல, அதுக்குல்ல பைக்கா?”
நான், சார், சார்?”ன்னேன்.
சார்ஜெண்ட், “யோவ், என்னயா அங்க? இங்க வரச்சொல்லு
நான், “சார், குட்ஈவ்னிங் சார்
அவர், தம்பி, லைசென்ஸ் இல்லாம வண்டி ஓட்டக் கூடாது
சார், இது 49சிசி வண்டி. ரூல்ஸ் படி, இதுக்கு லைசென்ஸ் தேவயில்ல
ரூல்சா பேசுற? அப்படி ஒரு ரூலே கெடயாது. 250 ருபா ஃபைன், இல்ல பைக்க கோர்ட்ல வந்து எடுத்துக்க
அவர்ட்ட ஒரு 50ருபா குடுத்துருந்தா போதும். விட்ருப்பாரு. நம்ம வாயால 200 ருபா தண்டம்.
அப்புறம், மெயின் ரோட்டுக்கே போறதில்ல. ஒத்தையடி பாதேலல்லாம் ஓட்டுவேன். கெழவிங்க கட்டேல போறவனேன்னு திட்டுவாங்க.
எவ்ளோ நாள் தான் ஒத்தயடி பாதைலையே போறது? இன்னிக்கி மெயின் ரோட்ல போவாம். 
அதே சார்ஜெண்ட் கிட்ட மாட்டினேன்.
சார், அதான் போன தடவையே 250 ருபா ஃபைன் கட்டினேனேன்னேன் கோவமா.



அட தம்பி நீங்களா? போங்க போங்க, ஹிஹின்னார், வழிஞ்சுக்கிட்டே.
அப்புறம் பயம் போயிடிச்சி. ஃபுல்லா மெயின் ரோடு தான்.
நம்ம வண்டி விழாத எடமே இல்ல. சும்மா போயிட்டுருக்கும் போதே விழுவேன். அப்படி ஒரு ராசி.
கப்பல், டிரெய்ன் தவிர எல்லா வண்டிங்களையும் இடிச்சாச்சி. நம்மள விட வண்டிக்குக் கம்மியா தான் அடிபடும். அடிலேந்து தப்பிக்க, பைக் என் மேல வுழுந்து எஸ்கேப் ஆயிடும். 
அப்புறம் காலேஜ் படிக்கிறப்ப, ஒரு கிராமத்து செக் போஸ்ட்ல மாட்டினேன். வேற யாருமே இல்ல.
அவருக்கு டீ, காஃபிக்கு காசு இல்ல போல. பக்கத்து ஊர்க்கார்ர் தான். அவர்ட்ட ஒரு அரை மணிநேரம் ஊர்க் கதை ஒலகக் கதையெல்லாம் பேசி நழுவிட்டேன்.
லைசென்ஸ் வாங்கியாச்சு. ஒரு நாள், ஒரு பைக்ல மூனு பேரு போணோம், புடிச்சிட்டாங்க. காலேஜ் மேல என்ன கோவமோ இன்ஸ்பெக்டர் கத்து கத்துனு கத்துறார். கேஸ் போட்டுட்டாங்க.
ஒரு மாசம் கழிச்சு ரெண்டு டிராஃபிக் போலீஸ் வீட்டுக்கு வந்தாங்க. அம்மா, “ஐயோ, காலேஜுக்கு போனவனுக்கு ஆக்சிடெண்ட்டானு பயந்துட்டாங்க. அவங்க கதைய சொல்லவும், ஒரே சிரிப்பு. ஃபைனை சந்தோக்ஷமாக் கட்டினாங்க.
அவங்க போனத்துக்கு அப்புறம், நான் வந்தேன். பக்கத்து வீட்டுப் பையன், மொட்டையா, “அல் உன்னத் தேடி போலீஸ் வந்துருந்தாங்கனான்.
ஐயோ, காலேஜ்ல, நம்ம ராகிங் பண்ணினது போலீஸ் கம்ப்ளைண்ட் ஆயிடிச்சு போல, நம்ம லைஃப் அவ்ளோ தான்னு பயந்து உள்ள போனா, அம்மா சிரிச்சுக்கிட்ருக்காங்க.
ஒரு நாள், ஒருத்தனோட வண்டில பின்னாடி ஒக்காந்து போயிட்ருந்தேன். போலீஸ் மறிச்சார். அவன் வேகமா அவர சுத்திக்கிட்டு ஓட்டறான்.
போலீஸ் லத்தியை சுத்திக்கிட்டே, “நிறுத்துடா &%$#@”ன்னார். லத்தி, வண்டியில் படுறதுக்கு முன்னாலயே அவன் வெரட்டிக்கிட்டு எஸ் ஆயிட்டான்.
நான், “டேய் என்னடா பண்ற? வண்டிய நிறுத்துடா
டேய் சும்மார்ரா, நான் எத்தன தடவ இப்படி எஸ்கேப் ஆயிருக்கேன்
அட சைக்கோ தலையா. அப்புறம் நான் பாதிலேயே எறங்கிட்டேன். அப்புறம் அவன் பைக்குல ஏறுறதே இல்ல.
குரங்குக்கோட்டைல ஒரு நாள், டிஃபன் சாப்ட்டு முடிச்சு, ஃப்ரெண்டு வண்டில போறோம். அவன் ஒட்டுறான், நான் பின்னால உக்காந்திருக்கேன். ராத்திரி நேரம். போலீஸ் வண்டிய நிப்பாட்டி ஊதுங்குறார். அவன் அவர் மூஞ்சில ஊதினான். 
வாசணை வருதே”, எனக்கு அப்படியே வெலவெலத்துப் போச்சி.
அவன், “சார் சார், அது நேத்து சாயங்காலம் அடிச்சது, வராதே?”ன்னான்.
அவர், ”வருது. சாப்பாடு வாசம்ன்னு சிரிக்கிறார்.
அடப்பாவிகளா!!! ஒரு நிமிக்ஷத்தில எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்.
ஒரு நாள், ஒரு ஊருல, ஃப்ரெண்டோட, என் கார்ல போயிக்கிட்டுருக்கோம். எனக்கு வழி தெரியாது.
இந்த சிக்னல்ல லெஃப்ட் எடுன்னான்.
ஒன் வே! போலீஸ் நிப்பாட்டிட்டார். ஹலோ இது ஒன் வே. வேற ஸ்டேட் வண்டியா?. எடுங்க காசைன்னார்.
என் ஃப்ரெண்டு, “சார், நான் எவ்ளோ வாட்டி சைக்கிள்ல வந்துருக்கேன். நேத்துக் கூட யாரும் ஒன்னும் சொல்ல, அப்பலாம் இது ஒன் வே இல்லயா?”ன்னு கேட்டான். அடப்பாவி.
ஏன் நடந்து வந்தேன்னு சொல்லேன்ன்னார் போலீஸ்.
நான் டாக்டர் என சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி ஒடினோம்.
அப்புறம் ஒரு நாள், நான், வீட்டுக்காரங்க, ஒரு ஃப்ரெண்டு, மூனு பேரும் ஒரு கல்யாணத்துக்கு போயிட்ருக்கோம்.
அவன், அல் காரெல்லாம் வாங்கிட்ட போல?”
போடா, இது செகண்ட் ஹாண்ட். டப்பா வண்டி, விக்கப் போறேன்
ரோட்ல, முன்னாடிப் பாத்தா ஒரு கூட்டம். ஆக்சிடென்ட் ஆகி, அப்பா, அம்மா குழந்தை தரைல கெடக்காங்க. சுத்தி நின்னு, எல்லாரும் பேசுறாங்களே தவிர, யாரும் ஹெல்ப் பண்ணல. அவங்கள, நம்ம வண்டில தூக்கிப் போட்டுக்கிட்டு ஜிஹெச் போனேன். அவங்க, அவசர சிகிச்சைல உட்டுட்டு வந்து பாத்தா, ஒரு போலீஸ்கார்ர், நம்ம வண்டி நம்பர குறிச்சிக்கிட்டு இருந்தாரு.
அவர், “வெளி ஸ்டேட் வண்டி. என்னா குடிச்சீட்டு ஓட்டினீங்களா?”
நான், சார், சார், அவங்க இடிச்சது வேற யாரோ, நாங்க ஹெல்ப் தான் பண்ணினோம்
அவர் சுத்தி முத்திப் பாத்து, வண்டிய க்ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி இன்ஸ்பெக்ட் பண்ணினார். இதோ, ரத்தம் ஒட்டியிருக்கு, நீங்க ஆக்ஸிடெண்ட் பண்ணலன்னு சொல்றீங்க?”
ஹலோ, நான் மோதினா, கார் முன்னால தான ரத்தம் ஒட்டியிருக்கும், நீங்க சீட்டைப் பாத்துட்டு சொன்னா எப்படி?”
ஆமால்ல, அது வந்து……ன்னு பின்னந்தலைய சொறிஞ்சார்.
ஓஹோ. எதிர்பாக்குறாரா? “சார், நான் டாக்டர், இந்தாங்க ஐடி. வேணும்னா அடிப்பட்டவங்கக் கிட்டயே கேளுங்கன்னு சொல்லிட்டு கெளம்பிட்டேன்.
சிட்டில ஒரு கார்டியாலஜிஸ்ட்டை பாக்க நானும், என் ஃப்ரெண்டும் கார்ல போனோம். தெரியாத்தனமா, ஒரு ஒன் வேல உட்டுட்டேன். ரிவர்ஸ் எடுக்கலாம்னா ஒரு சுருட்டைமுடி போலீஸ் வந்து மறிக்கிறாரு. 
சார் நான் டாக்டர், இது ஒன் வேன்னு தெரியாது
வண்டி வேற ஸ்டேட் போலருக்கு, நீங்களும் வேற ஸ்டேட்டான்னார்.
வேற ஸ்டேட்னு சொன்னா மதிப்பில்ல. காசு கட்டாயம் புடுங்கிடுவாங்க.
இல்ல சார். பக்கத்தில உள்ள நசுங்குன நுங்கு ஹாஸ்ப்பிடல்ல இருக்கேன்”. பொய்.
டாக்டர்ங்கறதுனால விடறேன்னு என்னை பயங்கரமா மொறச்சார்.
என் ஃப்ரெண்டு, “டேய் அல், அஞ்சு வருக்ஷத்தில இந்த சுருட்டை முடி, பிடிச்சு, பணம் புடுங்காத ஒரே ஆள் நீ தாண்டா. நடந்து போனாக் கூட காசு வாங்கிடுவார். பெரியாளு தான் நீ
ஒரு நாள் பைக்ல கிளினிக் போயிட்ருந்தேன். கிளினிக் வாசல்ல ரெண்டு ஏட்டம்மா நிப்பாட்டினாங்க.
நான் டாக்டர் மேடம், அதோ பாருங்க, அந்த மெடிக்கல க்ஷாப்ல என் பேரு போட்ருக்கு
அவங்க போர்டைப் படிச்சாங்க, “Dr. அல்கேட்ஸ் MD, இவ்விடம் சகல வியாதிகளுக்கும் சிறந்த முறையில் பாக்கப்படும். தீபாவளித் தள்ளுபடி: பார்க்க 50, ஊசி போட 60, தையல் 100. சரியாகவில்லையென்றால் பணம் திருப்பித் தர மாட்டாது”, “டி பூமா, இங்க வாயேன், டாக்டர்டி
சார், மூனு நாளா கால்ல அரிப்பு, மருந்து எழுதி குடுங்களேன்
கிளினிக் வாங்க”, ஃபீஸ் போயிடுமே.
இல்ல சார். டூட்டி டைம்”. ச்ச.  சரின்னு எழுதிக் கொடுத்தேன்.
என்ன இங்க பேசிக்கிட்டு, டூட்டிய பாருங்கன்னு லோக்கல் எஸ்.ஐ வந்தார்.
சார், நான் டாக்டர்
அப்படியா? சார், இப்ப இருக்குற டாக்டர்லாம் சரியில்ல. இங்க முன்னாடி ஒருத்தர் இருந்தாரு. அஞ்சு ருபா தான் வாங்குவாரு. கைராசிக்காரரு
கடுப்புடன், “சரி சார், வரேன்”.
எல்லாத்தையும் விட இது தான் ஹைலைட்
குரங்குக்கோட்டை டம்ளர் ஏரியால, நான் ஒரு ஹாஸ்பிட்டல்ல டூட்டி பாக்கும் போது, அப்படியே ஒருத்தர அள்ளி வந்து பெட்ல போட்டாங்க. நான் அப்படி ஒரு பேக்ஷண்ட்டை பாத்த்தேயில்ல. தலை, நெஞ்சு, வயிறு, ஒரு கை, ஒரு கால், எல்லாம் நல்லாருக்கு. ஒரு கீறல் கூட இல்ல. டேங்க்கர் வண்டில மாட்டிக்கிட்டாராம்.

23 வயசு இருக்கும். ஒரு கை, ஒரு காலு ஃபுல்லா செதஞ்சிருச்சு, எடுக்க வேண்டியது தான். அவர தூக்கிட்டு வந்த வழி ஃபுல்லா ரத்தம். உடனே காலை உயர்த்தி, கட்டுப்போட்டு, ஸலைன் ஏத்த ஆரம்பிச்சேன். ரத்தம் போலவே இருக்கும் கொலாய்டும் ஏத்துனோம். பேக்ஷண்ட்டோட வந்தவங்க, போலீஸ் எல்லாரும் நிக்கிறாங்க.
பேக்ஷண்ட்டுக்கு வலியே இல்ல. க்ஷாக்ல இருக்கார். நல்லா முழிச்சிக்கிட்டு என்னை கெஞ்சலா பாக்குறார். 
15 நிமிக்ஷமா என்னென்னமோ பண்ணி போராடுறோம், பிபி கொறய ஆரம்பிச்சிடிச்சி. ரத்தம் அவங்க எடுத்துக்கிட்டு வரும் போதே கம்மியாயிடிச்சி. கை, காலை எடுத்தா தான் உயிர் பிழைப்பார்.
சார், அவரை உடனே ஜி.ஹெச் எடுத்துட்டுப் போங்க. ஆம்புடேட் பண்ணனும். வேற எங்கயும் சேத்துக்க மாட்டாங்க. வெரி சீரியஸ்
தூக்கிட்டு போய்ட்டாங்க.
நாலு மாசம் கழிச்சி, நான் பைக்ல எஃப் எம் ரேடியோ கேட்டுக்கிட்டு போயிட்ருக்கேன். போலீஸ்…
ஹெல்மெட் எங்க?”
சார், நான் டாக்டர். டம்ளர் ஹாஸ்ப்பிட்டல்ல தான் இருக்கேன்
பெரிய போலீஸ், “என்னய்யா?”ன்னார்.
டாக்டர்ங்கிறார் சார்
ஒ இவரா?”, அவர், தனியாக கான்ஸ்டபிளிடம், யோவ், கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் கேசு. ஏரியால பெரிய ரவுடி. லாரிக்கு அடியில மாட்டிக்கிட்டான். தூக்கிட்டு போனா, எந்த ஹாஸ்பிட்டல்லேயும் அவன் சீரியஸ்னு உள்ள விட மாட்டேன்றாங்க. கிட்ட்த்தட்ட சாவப் போறான். இவர் ஒருத்தர் தான் வைத்தியம் பாத்தார். போராடிப்பாத்துட்டு அனுப்பிட்டார். ஜி.ஹெச் போற வழிலேயே போயிட்டான். அங்க உள்ள டாக்டருங்க, இவர் பண்ணின ட்ரீட்மெண்ட் சீட்டைப் பாத்துட்டு, நாங்களா இருந்தாலும் இதைத் தான் செஞ்சிருப்போம், அவர் எப்பவோ போக வேண்டியவர்ன்னாங்க. அனுப்பிடுய்யா  

நான் பெரிய போலீஸை அடையாளம் கண்டு புடிச்சு, “அந்த பேக்ஷண்ட் என்னானார் சார்?”
ஹாஹாஹா, நீங்க கை வச்சீங்கல்ல? அவுட்டு

9 comments:

  1. அண்ணே ,,,வாங்களேன் ,,,நாம ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம் ..
    தம்பி ஓட்ட நீங்க உக்காந்து ,,,ஹா ஹா ,,அருமை அண்ணா ...

    ReplyDelete
  2. சில இடங்கள் ரொம்ப அருமையா இருந்திச்சு. நல்லா சிரிச்சேன். தொடர்ந்து எழுதுங்க Please.....

    ReplyDelete
  3. நல்லாருக்கு சார்

    ReplyDelete
  4. "குரங்கு கோட்டை" நெசமாவே இந்தபேருல ஒரு ஊரா?

    ReplyDelete
    Replies
    1. அந்த குழந்தையே நீங்க தானா சேக்காளி? ஹாஹாஹா

      Delete
  5. சூப்பர்.
    ஷாஜஹான்.

    ReplyDelete
  6. நான் பெரிய போலீஸை அடையாளம் கண்டு புடிச்சு, “அந்த பேக்ஷண்ட் என்னானார் சார்?”
    “ஹாஹாஹா, நீங்க கை வச்சீங்கல்ல? அவுட்டு”

    :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete