இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Thursday, July 18, 2013

முட்டையா இது..இந்தா வாங்கிக்க..பொத்தேர்..


 நன்றி அதீதம்.com

Murphy's law states that, "when you ask a person to do a job, he will always do it wrongly and a second person should go and correct his mistake.

மர்ஃபி, ரொம்ப நொந்துருப்பார் போல. கப்பல்ல எவனையாவது 'போய் அந்த நட்டை டைட் பண்ணிட்டு வா'ன்னா, அவன் டைட் வெக்கிறதுக்கு பதிலா, லூஸ் வெச்சுருப்பான். இஞ்சின்ல சத்தம் வந்து, இன்னோருத்தன் போய் நட்டை டைட் வச்சிருப்பான். "ஒருவனிடம் ஒரு செயலைச் செய்யச் சொன்னால், அவன் அதை, எப்பயும் தப்பாக செய்வான். இன்னொரு ஆள் போய் அதை சரி செய்ய வேண்டும்".

அட இது டெய்லி நடக்குதுங்க. ஒரு பேக்ஷன்ட் பாக்குறோம், தப்பா ட்ரீட்மென்ட் பண்ணி சீரியஸாகி வேற டாக்டர் கிட்ட போறதில்லையா.
-----------------------------------------------------------------------------

டிவில விளம்பரம் ஒடுது, "உங்கள் மளிகைக் கடைக்காரர், உங்கள் குடும்பத்தில் ஒருவர் இல்லையா? அவரைக் காப்பாற்றுங்கள், அந்நிய கடைகளை தவிர்ப்போம்"

குடும்பத்துல ஒருத்தரா? சரின்னு அண்ணாச்சிக் கடைக்கு போய், "அண்ணாச்சி, ஒரு நூறு ருவா குடுங்க. நாளைக்கு தரேன்"னேன்.

"இங்க என்ன வட்டிக்கா வுடுறோம்? என்ன வேணும்?"

அட கத்திரிக்கா சூப்பரா இருக்கே. வாங்கி வீட்டுக்கு போய் அவங்கள்ட்ட குடுத்தேன்.

கத்திரிக்காய அழகா வெட்டி, என்க்கிட்ட காமிச்சாங்க. பார்றா, ஒரு புழுப்பய ஹாயா படுத்துக்கிட்டு இருக்கான். பூச்சிக் கத்திரிக்கா பறந்து நேரா நம்ம நெத்திய அட்டாக் பண்ணிச்சி.

அடுத்த நாள் கீரை வாங்கினேன். பழைய கீரையாம், பூசாரி வேப்பிலையால அடிக்கிற மாதிரி, கீரக்கட்டால அடி வாங்கினேன்.

இன்னோரு தடவை, ஃப்ரெக்ஷ்க்ஷா தண்ணி தெளிச்ச கீரைய வாங்கிட்டுப் போனேன். 3 நாள் பேதி புடுங்குச்சு.

ஒரு நாள் அவங்களுக்கு புடிக்குமேன்னு காலிஃப்ளவர் வாங்கினேன். வீட்ல அதைப் பிரிச்சு, புழுக்குடும்பத்தையே காட்டினாங்க. மொத்துனு தலைல விழுந்துது. மொதல்ல ஃபீல்டிங் பண்ண கத்துக்கணும்.
------------------------------------------------------------------------------

"அண்ணாச்சி, என்ன காய்கறி வச்சிருக்கீங்க? எதுவுமே சரியில்ல"

"சரி, நல்லதா நானே தரேன்". விவரம் தெரிஞ்சவர். கரெக்ட்டா குடுப்பார்.

ஹய்யா....

வீட்ல குடுத்தேன், எதிலயுமே பூச்சி இல்ல. ஆனா கத்திரிக்காய் முத்தல், வாழக்கா பழமாயிட்ருக்கு, தக்காளி பழுக்கா பச்சையா இருக்கு. ஒடும் போது கூடையோட முதுகுல விழுந்தது. அன்னிக்கு சாப்பாடு, கொள்ளுக் கஞ்சி தான்.

------------------------------------------------------------------------------

சரின்னு தோல்விய ஒத்துக்கிட்டு, வீட்டுக்காரங்களை கூட்டிக்கிட்டுப் போனேன். அவங்க காய்கறி எடுத்து முடிக்கிறத்துக்குள்ள டவுன் பஸ்ஸு 50 கிமீ போயிட்டு திரும்பி வந்திடிச்சி

------------------------------------------------------------------------------

நம்ம மளிகைக் கடை அண்ணாச்சிய வாழ வெச்சது போதும், அந்நிய முதலீட்டை ஊக்கப் படுத்துவோம்னு, அன்னிலேந்து சம்பளம் வந்தோன்ன பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன்.

ஆஹா ஃப்ரெக்ஷ் காய்கறி, வெல கம்மி வேற, ஃப்ரிட்ஜ்ல வச்சி 15 நாள் சாப்பிடலாம். ஏசி வேற. அவங்க க்ஷாப்பிங் பண்ற நேரத்துல, நம்ம வீடியோ கேம்ஸ் விளையாடலாம். ஹைய்யா. காரு. ரொய்ய்ய்ங்ங்ங்....

அப்படி ஒரு மூனு மாசம் நிம்மதியா போச்சு. பாத்தா பேங்க் பேலன்ஸ் காலியாகி, கிரெடிட் கார்டுக்கு வ்ந்துட்டோம். தேவயில்லாத பொருள்ளாம் வாங்கி, கேம்ஸ் விளையாடி, வர வழில ஹோட்டல்ல சாப்பிட்டு, அங்க போறதுக்கு காருக்கு டீசல் போட்டு, அப்படின்னு ஒரு வருக்ஷ சேவிங்ஸ் போய் கடனுக்கு வந்திட்டோம்.

------------------------------------------------------------------------------
"அண்ணாச்சி, நீங்க நம்ம குடும்பத்துல ஒருத்தர்"

 இதுக்கு நாண்டுக்கிட்டு சாவலாம், "என்ன வேணும்?"

 "பூச்சி கத்திரிக்கா, அழுகின தக்காளி, பழைய தேங்கா, வாடின வெள்ளரிக்கா குடுங்க"
"என்ன இப்படி சொல்றீங்க? சரி இந்தாங்க".

 "எவ்வளோ?"

 "15 ரூபா"
"ஹைய்யா"
------------------------------------------------------------------------------
ஒரு நாள், அவங்க பொறந்த நாளுக்கு சர்ப்ரைஸா, ஒரு டிரெஸிங் டேபிள் வாங்கி, டோர் டெலிவரி செய்ய வெச்சேன்.

 அவங்க தட்டிப் பாத்துட்டு, "ம்ம்ம். பரவாயில்லை"ன்னாங்க. அப்படின்னா வேஸ்ட்னு அர்த்தம்.
வெட்டிங் அனிவர்ஸரிக்கு சர்ப்ரைசா ஒரு தங்க பென்டன்ட்.

 "டிசைனா இது? ஹ்ம்". அதை உருக்கி தோடாக்கியாச்சி.

சர்ப்ரைஸா ஒரு புடவை....

 "உவ்வ்வ்வேக்"
------------------------------------------------------------------------------
இதுக்கு மேல தாங்காது சாமி. "இந்தா ATM கார்டு. உன் இக்ஷ்டப்படி என்ன வேணா வாங்கிக்க"

"என் இக்ஷ்டப்படி என்ன வேணா வாங்கலாமா?"

"என்ன வேணுன்னாலும்"

 "சரி, துணைக்கு வாங்க".

ஹைய்யா. இனிம குறையே வராது. யோவ் மர்ஃபி. உன்ன சாய்ச்சுட்டேன் பாத்தியா. இனிமே அவங்களுக்கு புடிச்சதை அவங்களே வாங்கிப்பாங்க. எனக்கு அடி மிச்சம்

புடவைக் கடை...

4 மணி நேரமா, 250 புடவைய ரெண்டு தடவ பாத்து, அஞ்சு செலக்ட் பண்ணாங்க.
என்னைக் கூப்ட்டாங்க...ஏதோ இடிக்குதே...

"இதுல எது நல்லாருக்கு?"

அய்யய்யோ...

"இது"ன்னு ஒன்னைக் காட்டி இளிச்சேன்.

முறைச்சாங்க...

"இல்ல இது". திரும்பவும் முறைப்பு. "இல்ல இது"

"எதுவுமே வேணாம். வாங்க வேற கடைக்கு போவோம்"

மர்ஃபி மூலையில் நின்னு நரி ஊளை உடுற மாதிரி சிரிச்சான்.


4 comments:

  1. ஹா ஹா ,,அண்ணே ,,அடி பலமோ ??
    சூப்பர் சூப்பர் ...

    ReplyDelete
  2. ஸ்ரீ மர்ஃபி துணை

    ReplyDelete
  3. வாரி வழங்கிய கமென்ட்டுகளுக்கு நன்றி...

    ReplyDelete