குரங்குக்கோட்டை சிட்டில பல்பு ஏரியா ஹாஸ்பிட்டல்ல மதிய டூட்டில இருந்தப்போ, வார்டுல ஒரு 30 வயசு ஆள் அட்மிட் ஆனார். ரூம் நம்பர் 28.
ரவுண்ட்ஸ் போகும் போது அந்த ரூமுக்குள்ள போனா, மிக்ஸில ஜூஸ் போட்டுக்கிட்டிருந்தார்.
மிக்ஸியா? இவரு ரூம்ல மட்டும் எப்படி???
"வாங்க சார்"
"ஹலோ. குட் ஈவ்னிங். அட்மிட் ஆகி 3 நாளாச்சு. இப்ப எப்படி இருக்கீங்க?"
"நல்லாருக்கேன் சார். ஜூரம் இப்போ இல்ல. வாந்தியும் ஸ்டாப் ஆயிடிச்சி. அதான் ஜூஸ் பண்ணிக்கிட்டுருக்கேன். ஹிஹி"
"ஒகே"
"சார். ஓக்ஷோ படிச்சிருக்கீங்களா?"
ரூம் ஃபுல்லா ஓக்ஷோ புக்ஸு. பரவால்லயே. ஆள் இன்டலெக்சுவல் போலருக்கு.
"முன்னாடி படிப்பேன். இப்ப அவர் கருத்து நமக்கு ஒத்துவரல. இப்போ கண்ணதாசனோட 'அர்த்தமுள்ள இந்துமதம்' தான் கரெக்ட்னு படுது".
"ஒக்ஷோ என்ன சொல்றார்னா, 'It's not a question of learning much. On the contrary. It's a question of UNLEARNING much.', எவ்வளவு படித்தான் என்பது முக்கியமில்லை. எவ்வளவு மனதில் இருந்ததை துறந்தான் என்பது தான் முக்கியம்"
நான் ஒன்னும் புரியாமல், "வரேங்க"ன்னு ஒடிட்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------
அஞ்சு நாள் கழிச்சு வார்டு நர்ஸ், "சார், 28ம் ரூம் பேக்ஷன்டையும் பாத்துடுங்க"
"அவருக்கு தான் சரியாப் போய், டிஸ்சார்ஜ் பண்ண சொல்லியாச்சே. சும்மா தான தங்கிருக்கார்? எதுக்கு பாக்கணும்?"
"இல்ல சார், அப்பப்போ பாத்திடுங்க. பாக்கலேன்னு கம்ப்ளைன்ட் பண்ணிட போறார்..."
நான் கதவ தட்டிட்டு உள்ள போனேன்.
வார்ட் பாய்யோட சீட்டுக் கச்சேரி நடந்துக்கிட்டுருந்துது. பாத்திரம், பண்டம், எல்லாம் ரூம்ல இருக்கு. அடப்பாவி, ஃப்ரிட்ஜ் வேறயா? குடித்தனமே போட்டாச்சா?
"வாங்க சார்"
"உடம்பு தேவலையா? எதுவும் கம்ப்ளைன்ட் இல்லயே?"
"இல்ல சார். நீங்க சொன்னப்புறம், அர்த்தமுள்ள இந்துமதம் எல்லா வால்யூமும் வாங்கி படிச்சிக்கிட்டுருக்கேன். நல்லாருக்கு. ஃபிலாசஃபிக்கல். சார், நம்ம ஜீவாத்மா, நம்ம சரீரத்துலேந்து விடுபடும் போது, பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறது. பிறகு அதுவே வேறொரு பிறப்பில் உயிராக வருகிறது"
அய்யய்யோ!!! ஜூரம் போய் பைத்தியம் வந்துருச்சோ. சைக்கியாட்ரிஸ்ட்டை கூப்பிடனும்.
"ஓகே வரேன்"
அவர் விடாமல், "சார், வில் டுரான்ட்டின், 'தி ஸ்டோரி ஆஃப் ஃபிலாசஃபி' படிங்க. அதுல ப்ளேட்டோ என்ன சொல்ல்லிருக்கார்னா," எல்லா பாலும் வெண்ணை ஆகலாம். ஆனா வெண்ணை பாலாவாது..........."
உடு ஜூட்னு ஒடிட்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------
10 நாள் கழிச்சு....
"ஹலோ சிஸ்டர்"
"வாங்க சார்..."
"ஏதாவது படம் பாத்தீங்களா?"
"ஆரியான்னு ஒரு மாதவன் படம்.என்னா கதை சார்.... சூப்பர் படம்"
ஆரியா நல்ல படமா???? இனிமே இந்த நர்ஸை வார்டு டூட்டிக்கு போடக்கூடாது. அப்புறம் பேக்ஷன்ட்ஸ் பில்லு கட்ட மாட்டாங்க.
தெரியாத்தனமா 28ல நுழைஞ்சிட்டேன். உள்ள பாத்தா டிவி, டிவிடி ப்ளேயர், ஏர் கூலர்னு நம்ம வீட்டுல இல்லாதது கூட அங்க இருக்கு. டிவியில ஜெர்மன் படம் சப்டைட்டிலோட ஒடிட்ருந்துது. நான் போன நேரமா பாத்து ஹீரோ கெட்ட வார்த்தையால திட்டிக்கிட்டுருக்கான்.
அவர், "வாங்க சார்"
"ஹலோ. ஹெல்த் எல்லாம் எப்படி இருக்கு?"
"அதுக்கென்ன சார். நல்லாருக்கேன்", டிவியை காமிச்சு, இது DAS BOOTனு ஒரு சப்மரைன் படம்".
"தெரியும் பாத்துருக்கேன்"
'அதுல ஹீரோ என்ன சொல்றான்னா, 'நாம் அழிந்தால் உலகமே அழிவதில்லை. ஆனால்......"
"சரிங்க நான் வரேன்"
"சார்...."
"என்ன?"
"ஒரு தெளசன்ட் ருபீஸ் இருக்குமா? ATM கார்டு மிக்ஷின்ல மாட்டிக்கிச்சு. அது ரிலீஸ் ஆனவுடனே தரேன்"
"அவரிடம் பர்ஸைக் காட்டி, பதினஞ்சு ரூபா தான் இருக்கு. சம்பளம் பத்து நாள் கழிச்சு தான் வரும். வரேன்"
-----------------------------------------------------------------------------------------------------------
நாலு நாள் கழிச்சி,
"சிஸ்டர், புதுசா படம் ஏதாவது பாத்தீங்களா?"
"28ம் ரூம் பேக்ஷன்ட் போட்டுக் காமிச்சார் சார். ஏதோ கொரியா டைரக்ட்டர் 'கிடுக்கிப் புடி' யோட படம். ஒன்னும் புரியல"
"கிம் கி டுக். பெரிய ஆள். சரி, பேக்ஷன்ட் இன்னும் இருக்காரா ?"
"சார் நைட்டோட நைட்டா ஒடிட்டார் சார், ஹாஸ்பிட்டல் பில் செட்டில் பண்ணாம"
"என்னாது ஒடிட்டாரா? ஃபிலாசஃபில்லாம் பேசினார்? உலக சினிமா, நாவல்லாம் படிச்சார்?"
"சுத்த ஃப்ராடு சார். எங்களுக்கு வட்டியோட திருப்பித் தரேன்னு சொல்லி, 12 நர்ஸ் கிட்டயும் ஆளுக்கு 500 ருபா அடிச்சிட்டாரு. வார்ட் பாய், ஆயாம்மாக்கிட்ட ஆளுக்கு 200 ருபா கறந்திட்டாரு. ஒனர்கிட்டயே 2000 ருவா அடிச்சிட்டாரு. நீங்க மட்டும் தான் தப்பிச்சீங்க".
"அந்த டிவி, புக்கு, ஃபிரிட்ஜ்லாம்?"
"நான் இந்த ஹாஸ்பிடல்ல தான் தங்கிருக்கேன்னு சொல்லி எல்லாத்தையும் வாடகைக்கு வாங்கிருக்கார் சார். இன்னிக்கி தான் இதை வாடகைக்கு விட்டவர் புலம்பிக்கிட்டே கழட்டிக்கிட்டு போனார்.

ஹஹஹஹஹஹா…! அனேகமா அவரு கடைசியா பகவத் கீதையைப் படிச்சிருப்பாருனு நெனைக்குறேன்! - 'எதை நீ கொண்டு வந்தாய் இழப்பதற்கு…? எது இன்று உன்னுடையதோ அது நாளை இன்னொருவனுடையது…!'
ReplyDeletethis is different
ReplyDelete