மெடிக்கல் காலேஜ், முதல் வருடம், நாள் 45
ஊர்லேந்து பஸ் புடிச்சி காலேஜ் வந்து சேந்தேன், வழக்கம் போல. ஒரு 30 வயது ஆள், எங்களோட ஒக்காந்து கிளாஸை கவனிச்சுக்கிட்டு இருந்தார். பேரு, வேகாத மூளை.
ஒரு நாள், நான் அவரிடம் கேட்டேன், "வேகாத மூளை சார், நீங்க எந்த ஊரு?"
"மண்ணுகுடிச்சான் விளை, தெக்கால இருக்கு"ன்னு பின்னாடி கையக் காட்டினார்.
"வயசு என்னா இருக்கும்?"
"ஏய், போடா அங்கிட்டு. என்னவாயிருந்தா உனக்கென்ன?", வாயிலேந்து தெக்கால இருக்கும் குற்றால அருவி போல சாரல் வருது.
அவன் சின்சியரா நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருந்தான்.
பாக்க பேக்கு மாதிரி இருக்கானே, என்ன எழுதியிருக்கான்னு பாப்போம்னு பாத்தா, ஒன்னுமே எழுதல. வாத்தியாரை இப்படி நோட்டு ஃபுல்லா வரைஞ்சு வச்சிருக்கான்.
அந்த லெவலுக்கு மாக்கானா?
------------------------------------------------------------------------------------------------------
"டேய் கட்டப்பை, வேகாத மூளை ஆக்சுவலா யாருடா?", இந்த 'ஆக்சுவலா' போட்டு பேசாத பசங்க பொண்ணுங்களே அப்ப கெடையாது.
"அவங்கப்பா பெரிய பணக்காரரு. இவன் டுவெல்த்தை 4 வருக்ஷம் படிச்சு பாஸ் பண்ணினான். அப்புறம் தமிழ்நாட்லயே ஃபேமஸ் மெடிக்கல் காலேஜான, சிலுக்கு சிட்டு காலேஜில லட்ச லட்சமா பணம் கொடுத்து சேத்தாங்க"
"சிலுக்கு சிட்டு காலேஜா? ஃபாரின் பசங்க ஃபிகருங்கல்லாம் படிப்பாங்களே, அப்புறம் இவன் ஏன்டா இங்க வந்தான்?"
"இநத மாக்கான் இருந்தா, நம்ம காலேஜுக்கே கெட்ட பேராயிடும்னு அனுப்பிட்டாங்க. இந்த மாதிரி இன்னும் ரெண்டு காலேஜில பணம் கட்டினாங்க. எல்லாரும் ரெண்டு மாசம் பாத்திட்டு, இவனுக்கு பத்து வயசு பயலோட மூளை தான் இருக்குனு விரட்டி அடிச்சாங்க. நம்ம ஒனருக்கு 8 வயசு பய லெவலுக்கு தான் மூளை இருந்ததால, பாசத்தோட உடனே ஒத்துக்கிட்டார். ஒனர்ட்ட டெய்லி ஃபோன்ல பேசுவான் மாப்ள. ரெண்டு பேரும் தோஸ்த் ஆயிட்டாங்க".
வாத்தி, "ஹூ இஸ் மர்மரிங் தேர்?"ன்னார்.
டுபுக்கு டைரி, உடனே வேகாத மூளைய கிச்சுகிச்சு மூட்டினான். அவன் சத்தமா சிரிச்சு நெளிஞ்சான்.
வாத்தி அவனை, "நீ தான் பேசுறதா? அமைதியா இருக்க மாட்டியா? வாட் இஸ் யுவர் நேம்?"
அவன் சுத்திமுத்திப் பாத்து, தலைய சொரிஞ்சான்.
டுபுக்கு, வேகாத மூளைக்கிட்ட கிசுகிசுத்தான், "உன் ஊரு என்னனு கேக்கறார்டா"
உடனே வேகாத மூளை, "மண்ணு குடிச்சான் விளை சார்"னு சிரிச்சான்.
அவர் அட்டன்டென்ஸ்சை பாத்து, "ஐ கான்ட் ஃபைன்ட் யுவர் நேம் இன் தி ரெஜிஸ்டர் ( I cant find your name in the register) . கம் எகெய்ன்"
அவன் டுபுக்கைப் பாத்தான். அவன், "அப்பா என்ன யாவாரம் செய்யரார்னு கேக்குறார்டா"
"புண்ணாக்கு சார்" ன்னான், சத்தமா.
"வாட்...கெட் அவுட் யூ ஃபூல்"
கீழே, "உன்ன ரொம்ப புடிச்சிருக்காம். வந்து கட்டிப்புடிக்க சொல்றார். போய் கட்டிப்புடி"
அவன், லேசாக இளித்துக் கொண்டே நடந்து போய், வாத்திய கட்டிப்புடிச்சான்.
அவர், "டேய், என்ன விட்றா. வெளிய போ"
அவன் ஜாலியா கேண்டீனுக்கு போய், ஆறு சமோசாவும், ஒரு காஃபி, ஒரு பாதாம் பால் சாப்பிட்டான்
----------------------------------------------------------------------------------------------------------
நான், "டேய் கட்டப்பை. வேகாத மூளை எங்கடா தங்கியிருக்கான்?"
"நம்ம ஹாஸ்டல்ல தான். அன்னிக்கு நீ சீனியர்ஸ் ராகிங் பண்ணும் போது, தரைல நீச்சல் அடிச்சியே, அப்ப அவன பாக்கலியா?"
நான் எரிச்சலுடன், "இல்லயே".
"அவனுக்கு வயசு அதிகம்கற்துனால, சீனியர்ஸ் அவன போனா போகட்டும்னு விட்ருவாங்க. ஒரு சீனியர் அவனுக்கு ஸ்கூல்ல எட்டு வருக்ஷம் ஜூனியரும் கூட"
"எப்படிடா அவன சமாளிக்கிறீங்க?"
"நீ தான் பாத்தியே. டெய்லி காலேஜ் வந்து, ருமுக்கு போய் தூங்கி, சாப்ட்டு முடிச்சா, சீனியருங்க 3 மணிநேரம் நம்மள கல்லா கட்டுவானுங்க. ஞாயித்துக்கிழம மட்டும் தான் ரெஸ்ட். அன்னிக்குப் பாத்து அவன், இங்க கூட்டிட்டுப் போ, அங்க கூட்டிட்டுப் போன்னு, எங்கள நச்சரிப்பான். அவனுக்கு சீனியருங்க ஃப்ரெண்ட்ஸ்கிறதுனால நாங்களும் வேண்டா வெறுப்பா கூட்டிக்கிட்டு போவோம்"
"அடப் பாவமே!!!"
"இந்த சன்டே, ஒரு ஐடியா வச்சிருக்கோம், நீயும் வா, காமிக்கிறேன்".
-----------------------------------------------------------------------------------------------------------
சன்டே, இடம்: ஹாஸ்டல்..
எல்லோரும் எழுந்து, சாப்ட்டுட்டு, துணி துவைச்சிக்கிட்டிருந்தாங்க.
நேரா வேகாத மூளை என்க்கிட்டே வந்து, "டேய் அல்லு, உன் ஊரு கிழிஞ்ச ஊரு தான? வா போவோம்"ன்னான்.
அய்யய்யோ..., "இல்லடா மூளை, எங்க ஊரே வெள்ளத்துல சிக்கி அழிஞ்சிடிச்சி. நாங்கெல்லாம் கோயில்ல தான் தங்கியிருக்கோம்"
"அட. எந்தக் கோயில்டா, நல்லாருக்குமா?"
நான் அங்கிருந்து பதறி ஓடி டுபுக்கைத் தேடினேன்.
"டேய், இதுக்கு தான் வர சொன்னீங்களா? அவன் என்னோட வீட்டுக்கு கூட்டிட்டுப் போன்றான். இனிம இந்த ஏரியா பக்கமே வர மாட்டேன். நான் வரேன்".
டுபுக்கு சிரித்துக் கொண்டே, "இந்த ஐடியா எனக்கு தோணாமப் போச்சே.. சரி அதுக்க்கென்ன, அடுத்த மாசம் அனுப்பிடுவோம்"
"டேய் கொல விழும்"
அப்புறம் 30 பேரும், அவனை பஸ்டாண்டுக்கு கூட்டிட்டு போய், ஒரு பஸ்ல ஏத்தி, கண்டக்டர்க் கிட்ட டிக்கட் எடுத்து, "சார், இவன கன்றாவி புரத்துல எறக்கி விட்ருங்க"
"பாய் டா வேகாதமூளை"
"பாய்டா மச்சான்".
நான், "டேய், இவன வழியனுப்ப இத்தன பேரா?"
டுபுக்கு, "டேய், நீ வேற, இவன் தனியா நடந்து போனாலே காணாம போயிடுவான். அதான் டிக்கட் எடுத்து அனுப்பறோன். விக்ஷயம் அது இல்ல. இவன்டேந்து சன்டேல எப்படி தப்பிக்கிறதுனு ப்ளான் போட்டோம். சிக்கினவன், ஸ்டைல் மங்குணி. ஸ்டைல் மங்குணி, டே ஸ்காலர். அவன் ஊரு தான் கன்றாவிபுரம். அவன் வீட்டு அட்ரஸ வேகாத மூளைக்கிட்ட குடுத்து அனுப்பிருக்கோம். நாங்க இன்னிக்கு எஸ்கேப்".
---------------------------------------------------------------------------------------------------------
ஒரு மாசம் கழிச்சு,
"டேய் ஸ்டைல் மங்குணி"
"அல் மாப்ள, வாடா கேண்டீன் போவோம், டீ சாப்டலாம்"
"என்னடா ஒரே சோகமா இருக்க?"
மச்சி, அந்தக் கொடுமைய ஏன்டா கேக்குற. ஹாஸ்டல்ல பசங்க ஞாயித்துக்கிழமயானா, வேகாத மூளைய பஸ் ஏத்தி என் வீட்டுக்கு அனுப்பிடுறாங்க"
"அப்படியா?", தெரியாத மாதிரிக் கேட்டேன்.
"ஞாயித்துக்கிழம தான் நாங்க எல்லோரும் ஒன்னா உக்காந்து சாப்பிடுற டைம். அம்மா சூப்பரா கறி சமச்சிருப்பாங்க. கரெக்ட்டா அந்த டயத்துல வந்துடறான் மச்சி. மென்டல் மாதிரியே பேசுறான். சமயத்துல சண்டைக்கு வரான். வீட்டுக்கு வந்தவன் கிட்ட கோவமா படுறது? எல்லோரும் சாப்டும் போது, அவன் ஏதாவது பேசி, எங்க எல்லோஉக்கும் செம கடுப்பு ஆவுது."
நான், "என்ன தான் சொல்றான்?", சிரிப்பை அடக்க முடியாமல்.
"ஒரு ஃபோன் வருதுனு வச்சிக்கயேன், போன் பேசி முடிச்சிட்டு வச்சா, அவன் கேப்பான்
"யார்ரா ஃபோன்ல?"
"ஃப்ரென்டு மச்சி"
"பேரு"
"குட்டிக் கருப்பு"
"என்ன பண்றான்?"
"B.ed படிக்கிறான் மச்சி"
"எந்த ஊரு"
"இந்த ஊரு தான்"
"அவங்கப்பா என்ன பண்றாரு?"
"டீச்சர்"
"எந்த ஸ்கூல்ல?"
"கவட்மென்ட் ஸ்கூலுல"
"அவர் பேரு?"
"தெரியலியே மச்சி"
"என்ன பாடம் எடுக்குறார்?"
"பிஸிக்ஸ்"
"அவங்கம்மா?"
அப்படின்னு ஒரு ஃபோன் பேசினதுக்கு ஒரு மணி நேரம் பெடலெடுப்பான் மச்சி"
நான் சிரித்துக்கொண்டே, "அம்மாடி.."
"இதாவது பரவால்ல. பசங்க வைரமுத்து கவிதையோ, ஏதாவது ஒரு கவித புக்கையோ காசு போட்டு பஸ்டான்டுல வாங்கி அவன்ட்ட கொடுத்துடுவாங்க. ஒவ்வொரு கவிதையா படிச்சு அவனுக்கு புரிய வைக்க சொல்றான். டரியலாவுது மச்சி. அதுக்கே சாயங்காலம் ஆயிடும். மச்சி லாஸ்ட் பஸ் இதான்னு சொல்லி அனுப்பி வச்சுருவேன்"
"ஹாஹா அப்புறம்?"
"பசங்க, லாஸ்ட் பஸ் ராத்திரி பத்து மணிக்கு தான்னு கண்டுப் புடிச்சி, அவன்ட்ட சொல்லிட்டாங்க. ஒரு மாசமா ஞாயித்துக்கிழமன்னாலே பயமா இருக்கு மச்சி"
--------------------------------------------------------------------------------------------------------
மூனு மாசம் கழிச்சி, பஸ்டான்ட், ஒரு ஞாயித்துக்கிழம....
"மாப்ள, இது வேற பஸ்டா...", வேகாத மூளை.
டுபுக்கு, "மாப்ள, நீ இப்ப அல்கேட்ஸ் வீட்டுக்கு போற, கிழிஞ்ச ஊருல"
"மாப்ள, அவன் தான், ஊர்ல வெள்ளம் வந்து, எல்லாரும் கோயில்ல குடியுருக்கறதா சொன்னான்?"
"அப்படியா சொன்னான்?". அல், எஸ்கேப் ஆக பாக்குறானா, விடமாட்டோம்ல. "மச்சி, வெள்ளம் வடிஞ்சிருச்சாம், நீ போலாம். அவன் வீட்ல தான் இருப்பான்".
"பாய்டா மாப்ள"
"பாய்டா"

கோயில்ல சாமி என்னாச்சு..?
ReplyDeleteயாருலே சாமியாலே...?
Deleteஇரண்டாவது லட்டு தின்ன ஆசை எப்ப கிடைக்கும் .........
ReplyDeleteThis looks likes a good Idea, I have few pesons too to send...
ReplyDeleteஉங்க ஃப்ரெண்ட் படம் வரையவாவது செஞ்சார். நீங்க?!
ReplyDeleteசெம செம!!
ReplyDeleteநித்யா கந்தசாமி!