மெடிக்கல் காலேஜ், முதல் வருடம், நாள் 60
தப்புக்கணக்கு, குந்தவெச்சான்புரத்துல உள்ள பெரிய டாக்டரோட மவன். ஒரு நாள்
கிளாஸில் நான், "மாப்ள, இந்த வாத்தியாரு தான் பிஸியாலஜில பெஸ்ட். சூப்பரா எடுக்குறாரு
இல்ல?"
அவன், "டேய், இவரு
பயோ கெமிஸ்ட்ரி வாத்தியார்டா...கிழிஞ்சுது போ"
வாத்தி, "என்ஜைம்ஸ் ஆர் பயோ கேட்டலிஸ்ட்ஸ்...".
நான், " என்னடா என்ஜைம்ங்கிறாரு? என்ஸைம்ஸ் இல்ல?".
"ஆமா
மச்சி. அவரு ஒரிசாக்காரரு. பொறந்தோன்ன குழந்தைங்க பெரியவங்கள எதுத்துப் பேசாம
இருக்க நாக்குல சூடு வெச்சிடுருவாங்க. அதனால 'Z' வராது. Lazy ய, ‘லேஜி’ம்பாங்க.
செம காமெடி".
"நீ
ஹாஸ்டல்ல இல்லயே. எங்க தங்கியிருக்க?".
"நானும், டிஸ்கோ எருமையும் ஒரு காம்ப்ளக்ஸ்ல பக்கத்து பக்கத்து ரூமில
இருக்கோம்".
"ஒரு
நாள் வரேன்".
"கன்டிப்பா
வாடா".
-------------------------------------------------------------------
ஒரு
நாள் அவன் ரூமுக்கு போனேன். டிஸ்கோ துண்டோட நின்னுக்கிட்ருந்தான். தப்புக் கணக்கு
ஜட்டியோட கட்டில்ல.
டிஸ்கோ, "அல். வாடா. என்ன அதிசியமா இங்க வந்துருக்க?"
தப்பு, "நாந்தாண்டா வரச் சொன்னேன்".
ஒரே
சாமி படம், ஊதுபத்தி வாசம். ரூம்
க்ளீனா இருந்துது.
"என்னடா
ஒரே பக்திப் பரவசமா இருக்கு?"
டிஸ்கோ, "இவன் இப்படித்தான். நம்ம ரூமுக்கு வந்து பாரு. ஒரே பொண்ணுங்க
படமா இருக்கும்".
தப்பு, "டேய் அல், அங்க
போகாத. அவன் சாக்ஸை தோய்க்க மாட்டான். ஒரு மாசம் ஒரே சாக்ஸைப் போட்டுட்டு, வாசல்ல ஒக்காந்து எரிச்சுக்கிட்ருப்பான். நாத்தத்துல
செத்துடுவ".
ஒரு
மதம் புடிச்ச யானை உள்ள வந்து கட்டில்ல தப்பு மேல உழுந்துது.
தப்பு, "ஐயோ
அம்மா. டேய் அல், இவன்
தான் தீவட்டித் தடியன். ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டுடன்ட். பக்கத்து ரூம். தீவட்டி, இவன் அல் கேட்ஸ். நம்மாளு".
"ஹாய், எந்த ஊரு?"ன்னான்
தீவட்டி.
தப்பு, "அவன் கிழிஞ்ச ஊரு மச்சி. இன்னிக்கு அவன் பர்த்டே".
தீவட்டி
பயங்கர குக்ஷியாகி, "ஹாப்பி
பர்த்டே மச்சி. சரி எல்லோரும் வாங்க, இன்னிக்கு அல் ட்ரீட்"
எல்லாரும்
பஜ்ஜி கடைக்குப் போய் பஜ்ஜி, காஃபி
சாப்ட்டோம். தீவட்டித் தடியன் 2 வடை, 4 பஜ்ஜி, ஒரு
காஃபி சாப்ப்ட்டான்.
அப்புறம்
தீவட்டி, "டிஸ்கோ, நீயும்
தப்பும் ரூமுக்கு போங்க. என்னோட க்ளாஸ்மேட்ஸை இவனுக்கு இன்ட்ரோ பண்ணிட்டு
வரேன்".
ரெண்டு
பேரும் பைக்ல 10 நிமிக்ஷம் ஒரு வீட்டுக்கு போனோம். வாசல்ல ஒரு நாப்பது செருப்பு, க்ஷீவெல்லாம் கிடக்கு. ஒரே குப்பை.
உள்ள, ஒரு 15 பேரு தரைல படுத்துக்கிட்டுருக்கானுங்க. தடித்தடியா.
தீவட்டி, "மாப்ளைஸ், இவன்
அல், மெடிக்கல் காலேஜ் ஸ்டுடன்ட்".
எவனும்
கண்டுக்கல.
"இன்னிக்கு
இவன் பர்த்டேடா"
உடனே
எல்லாரும் ஒடி வந்து ஒவ்வொருத்தனா இன்ட்ரோ ஆகி கட்டிப் புடிச்சு வாழ்த்துறானுங்க.
ச்ச ரொம்ப நல்ல பசங்க.
அப்புறம்
பின்னாடி ரெண்டு பேர், முன்னாடி
ரெண்டு பேர் நின்னுக்கிட்டானுங்க. அப்படியே என் ரெண்டு கையையும் காலையும் புடிச்சு
அந்தரத்துல தொங்க வுட்டானுங்க. நான் தரைக்கு 2 அடிக்கு மேல படுத்த வாக்குல
தொங்குறேன்.
ஒவ்வொருத்தனா
வந்து பட்டக்ஸ்ல ஒதைக்கிறான். செம ஒதை. ரெண்டு சைட்லேந்தும் உதை விழுது. கணக்கு
வழக்கு இல்லாம பின்னியெடுக்குறானுங்க. அப்புறம் கோயில் திருவிழால சாமி புறப்பாடு
போது தோள் வலிக்குதுனா மாத்திப்பாங்கல்ல..அந்த மாதிரி கைய புடிச்சிக்கிட்டு
இருந்தவன் வேற ஒருத்தன்ட்ட குடுத்துட்டு ஒதைக்கிறான்.
10
நிமிக்ஷம் கழிச்சு, எல்லாரும்
போய் படுத்துக்கிட்டானுங்க.
தீவட்டித்
தடியன், "ஹாப்பி பர்த்டே மாப்ள. இதான் பர்த்டே பம்ப்ஸ். வா ரூமுக்கு
போவோம்"
ரூம்ல, டிஸ்கோ, "முடிஞ்சுதாடா?"
தீவட்டி, "ஆச்சு மச்சி. அவன் அழவேயில்ல".
"சரி
நம்ம ஆரம்பிப்போம்"
-------------------------------------------------------------------
அனாடமி
டிசெக்க்ஷன் ஹால்....
மேடம்
டெட்பாடில காட்டி, "பாருங்க, இது தான் தோல். அதுக்கு கீழ கொழுப்பு, அதுக்கு கீழ sub cutaneous tissue, அப்புறம் deep fascia, அப்புறம்
தான் muscle (தசை) வரும்".
இப்போ
புரியுது. விட்ட ஒதைல எனக்கு இது எல்லா லேயரும் ஒட்டிக்கிச்சு. காலை அகட்டி அகட்டி
தான் நடக்கவே முடிஞ்சுது.
தப்பு, "மாப்ள, என்ன
முடியலயா? அவனுங்க எல்லாரும் ஃபுட்பால் ப்ளேயர்ஸ். கொஞ்ச நாளைக்கு
அப்படித்தான் இருக்கும்".
-------------------------------------------------------------------
பயோ
கெமிஸ்ட்ரி லேப்....
இங்க
வரதுனாலே ஜாலி தான். ஸ்கூல் கெமிஸ்ட்ரி
லேப் மாதிரி இருக்கும். அவங்க ஒரு குடுவைல ஒரு கலவைய குடுத்து, அதுல என்ன இருக்குனு கண்டுப் புடிக்க சொல்லுவாங்க. நாங்க பல
டெஸ்ட் பண்ணி கண்டு புடிப்போம்.
கண்டுபிடிச்சு
முடிச்சப்புறம் தான் ஜாலி. ஏதோ ரெண்டு பாட்டில்ல உள்ள கெமிக்கலை மிக்ஸ் பண்ணி
நெருப்புல காமிப்போம். அது வயலட், சிவப்புன்னு
கலர் கலரா வெடிக்கும். சில சமயம் பயங்கர நாத்தம் வந்து வாத்தியார் எட்டிப்
பாப்பாரு. அந்த டெஸ்ட் ட்யூபை வேற எடத்துல வெச்சிட்டு எஸ்ஸாயிருவோம்.
நம்ம
பச்ச மாக்கானுக்கு டெஸ்ட்லாம் வராது. ஆனா மோந்துப் பாத்தோ, தொட்டு நக்கிப் பாத்தோ சொல்லிருவான்.
அன்னிக்கி
ஒரு சாம்பிள் கொடுத்தாங்க. அவன் தொட்டு நக்கிட்டு, "மாப்ள, குளுக்கோஸையும், புரோட்டீனும் சேர்ந்து மிக்ஸ் பண்ணி குடுத்துருக்காங்கடா"
வாத்தியார்
அப்புறம் சொல்றார், " இது
வரைக்கும் நம்ம பண்ணினது எல்லாம் சும்மா. இப்போ, இன்னிக்கு நான் குடுத்துருக்கறது ஒரு சுகர் பேக்ஷன்ட் யூரின்.
அதுல என்னலாம் இருக்கும்னு டெஸ்ட் பண்ணி சொல்லுங்க..."
பச்சமாக்கான்
மூஞ்சி லைட்டா பச்சை கலராச்சு.
-------------------------------------------------------------------
ஒரு ரெண்டு மாசம் கழிச்சு, தப்புக்கணக்கோட
ரூமுக்கு போனேன். எதுக்கும் "பேக்" சேஃப்டியா இருக்கட்டுமேன்னு ஒரு
நோட்டை பின்னாடி பேன்ட்ல சொருகிக்கிட்டு போனேன்.
"வா
அல்கேட்ஸ் மாப்ள"
"ஹாய்டா, தீவட்டித் தடியன் எங்கடா?"
"அவன்
ஃப்ரென்ட்ஸோட பஜ்ஜி சாப்பிட போயிருக்கான். யாரோ ஒரு இன்ஜினியரிங் காலேஜ் பய
சிக்கிருக்கான். அவன் பர்ஸ் காலியாகற வரைக்கும் அங்கே தான் இருப்பானுங்க"
"சரி
மாப்ள, உங்களுக்கெல்லாம் எப்ப பர்த்டே? ட்ரீட் வெக்கலாம்னு கேக்கறேன்".
"ஹாஹாஹா, என்ன அடி பலமா? எங்களுக்கு பர்த்டேயே கிடையாது. வந்தாலும் வீட்டுல போய்
கமுக்கமா கொண்டாடிடுவோம்".
அடப்பாவிங்களா...
:))))))))))))
ReplyDeleteNo other words :)))))))))
ஹேப்பி பர்த் டே...
ReplyDelete-வீரா
This comment has been removed by the author.
ReplyDelete