இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Thursday, July 4, 2013

வால்பாறையில் நள்ளிரவு புலி வேட்டை

 நன்றி in &out chennai magazine

நானும், என்னோட தோஸ்த் சுபாக்ஷும், வால்பாறைக்கு போயிட்டு, சாயங்காலம் நாலு மணிக்கு திரும்ப பொள்ளாச்சிக்கு கார்ல வந்துக்கிட்டுருந்தோம். பாதி இறங்கியாச்சு. நான் ஃபோனை சட்டைலேந்து எடுக்கப்போனா.... காணும்.

"டேய் சுபாஷ், செல்லை லாட்ஜில சார்ஜ் போட்டுருந்தேன். மறந்து வெச்சிட்டு வந்துட்டேன். வா ரிடர்ன் போய் எடுத்துக்கிட்டு வந்திருவோம்." மெல்ல இருட்ட ஆரம்பிச்சுது. சுத்தி காடு. அமைதி.


"மாப்ள, மணி அஞ்சு, போயிட்டு வரதுன்னா, இன்னும் ரெண்டு மணி நேரம் ஆயிரும். அதுக்கப்புறம் காட்டு மிருகங்கல்லாம் சுத்த ஆரம்பிச்சுருமாம் மச்சி. வால்பாறைல சொன்னாங்க". எங்கேந்தோ ஒரு ஊளைச் ச்த்தம். ஊஊஊஊ

"போடா. லாரி, பஸ்ஸு போற ரூட்ல காட்டு மிருகம் வருமா? சும்மா கட்டுக்கதை மச்சி"ன்னு திரும்ப வால்பாறை போனோம்.

செல்லை லாட்ஜில் இருந்து எடுத்துக்கிட்டு காரில் ஏறும் போது, ஃபுல்லா போத்தியிருந்த வாட்ச்மேன், "சார், இந்நேரத்துலயா எறங்கப் போறீங்க? மணி ஏழாச்சு".

"ஆமாய்யா. நாளைக்கு டூட்டிக்கு போவணும்"

 "சார், எட்டு மணிக்கு மேல ஒரு வண்டி இருக்காது. புலி, சிறுத்தை, யான, கரடில்லாம் ரோட்டுக்கு வரும்"

"அடப்போய்யா, நாங்க பாத்துக்கறோம்".

"இல்ல சார்.......பேய்ங்களும் சுத்தறதா கேள்வி"

"உன்னப் பாத்தாலே கொஞ்சம் கொள்ளிவாய் பிசாசு மாதிரி தான் இருக்கு. இருட்டுல உக்காந்து பீடி குடிக்காத. வரோம்"ன்னு காரைக் கிளப்பினோம்.

மணி எட்டு.

"ஸ்ஸ்ஸ் டகட  டகட டகட டகட"

வண்டி பஞ்சர். எறங்கி டயர் மாத்துறோம். ஒரேயடியா குளுருது. ஊளை வேற.



டயர் மாத்தி முடிச்சோம். திடீர்னு, "தம்பி", பின்னாடிலேந்து குரல்.

அப்படியே வெறச்சுப்போய் திரும்பிப்பாத்தா, டிப்டாப்பாக ஒரு ஃபாரஸ்ட் ரேஞ்சர். சைட்ல பிஸ்டல். "தம்பி, போற வழில குரங்கருவி கிராமத்துல இறங்கிக்கிறேன்.

அவரை ஏத்திக்கிட்டு, தைரியமா போனோம். கார் ஏசி அதிகமானது போல குளிருதே. ஏசியை ஆஃப் பண்ணினேன்.

சுபாக்ஷ், "என்ன சார், பிஸ்டலோட ராத்திரில சுத்துறீங்க"

"தம்பி, ஒரு சிறுத்தைய தேடிக்கிட்டு இருக்கேன்"

அப்படியே தூக்கி வாரிப் போட்டுது.

"தம்பி, வண்டிய நிறுத்துங்க"

அவர் இறங்கி, ரோட்டுக்கு அருகே குணிஞ்சு மண்ணைத் தொட்டுப் பாத்தார். பிறகு காரில் ஏறி, "ஏழு வருக்ஷமா தேடிக்கிட்டுருக்கேன். கால் தடம் பாத்துட்டேன். பக்கத்துல தான் இருக்கான். இன்னிக்கு சிக்கிருவான்."

சுபாக்ஷூக்கு அந்தக் குளிர்லயும் வேர்க்க ஆரம்பிச்சுது.

திடீர்ன்னு, ரோட்ல குதறிப் போட்ட ஒரு ஆளோட உடல் கிடந்துது. உடனே ரேஞ்சர் இறங்கி, "ஐயோ, குமாரு நீயும் செத்துட்டியா"ன்னு கதற்றாரு. நாங்க காருக்குள்ளயே இருந்தோம். அவர் பாடிய தூக்கிக்கிட்டு, பின் சீட்ல போட்டாரு. "சிறுத்தை அட்டாக் பண்ணிருக்கு தம்பி".

நாங்க அப்படியே உறைஞ்சு போய் சீட்டோட ஒட்டிக்கிட்டோம். மூச்சை வெளிய விட்டா, புகையா வருது. பயங்கர குளிர். சுத்தி காடு. இருட்டா இருக்கு. காரை ஸ்டார்ட் பண்ணேன்.

"தம்பி, அந்த லெஃப்ட் எடுங்க"

காட்டுப்பாதை. பயந்துக்கிட்டே 3கி.மீ மலையேறினோம். சட்டுனு பயங்கர வெளிச்சமாய் ஒரு டீக்கடை.


ரேஞ்சர் இறங்கி, பாடிய அங்கேயிருந்தவங்கக் கிட்ட ஒப்படைச்சார்.

அங்க ஒரு பைனஞ்சு ரேஞ்சருங்க டீக்குடிச்சிக்கிட்டு இருந்தாங்க. போய்ப் பாத்தா, ஒரு ரேஞ்சர் காக்கி யூனிஃபார்ம், ஒருத்தர் பச்சை, ஒருத்தர் சட்டையும் அண்டா டவுசரும் போட்டிருக்கார், ஒருத்தர் முறுக்கு மீசையோட, தலைல முன்டாசு,  டவுசர் சட்டை போட்டிருந்தார். எல்லாரும் ஆளுக்கொரு துப்பாக்கி வித விதமா வெச்சிருந்தாங்க. மன்னர்கள் காலத்து நீட்டு துப்பாக்கிலேந்து, லேட்டஸ்ட் காம்பேட் துப்பாக்கி வரைக்கும்.

"தம்பி, இங்க வாங்க. இவரு முத்துப்பாண்டி, ஒத்தக்கண்ணன் புலிய தேடிக்கிட்டுருக்கார். அவரு நாராயணப் பிள்ளை, கருப்பன் கரடிய தேடிக்கிட்டுருக்கார். இவரு வில்லியம் (வெள்ளைக்கார ரேஞ்சர்), கருஞ்சிறுத்தை டக்ளஸை தேடிக்கிட்டுருக்கார். இவரு விஜய சேரன். ஒத்தக்கண்ணன் புலியோட தாத்தாவை தேடிக்கிட்டிருக்கார்"

நான், "இது என்ன எடம்?"

"இது டைகர் வேலி டீக்கடை. இங்க தான் ரேஞ்சர்லாம் ராத்திரி ஒம்போது மணிக்கு டீக்குடிச்சிட்டு, வேட்டைக்கு கெளம்புவோம்".

"நாங்க வரோம் சார்"ன்னேன், வாய்ல புகையோட.

-----------------------------------------------------------------------------------------------------------

40 கொண்டை ஊசி வளைவை தாண்டி பொள்ளாச்சி வந்து சேந்தோம்.

அடுத்த நாள் காலைல, பொள்ளாச்சி சரக ரேஞ்சர், பெருமாளுக்கு ஃபோன் போட்டேன்.

கதைய சொல்லி முடிச்சேன். அவர், "இருங்க, அரைமணில கூப்பிடுறேன்".

அரைமணி கழிச்சு அவர், "சார். நேத்திக்கு எந்த ரேஞ்சரும் சிறுத்தை கடிச்சு சாவலை. அந்த குமார், சிறுத்தை கடிச்சு இறந்து போய் மூனு நாள் ஆவுது. அப்பவே தகணம் பண்ணிட்டாங்க"

உறிஞ்சுன டீ தொண்டைல அடச்சுது.

"நீங்க சொன்ன பேர்லாம் விசாரிச்சேன். கடந்த என்பது வருக்ஷமா மிருகங்கள் கொண்ணுப் போட்ட ரேஞ்சர்கள் அவங்க. அதுலயும் விஜய சேரன், 150 வருக்ஷத்துக்கு முன்னாடி, புலி அட்டாக் பண்ணி இறந்திருக்காரு. மன்னர் பரம்பரை."

நெஞ்சு டக் டக்குனு அடிச்சிக்குது. வாய்க்கிட்டே புகை. "டேய் சுபாக்ஷூ, சிகரெட்டை அணைடா"

"நீங்க சொன்னது கரெக்ட். அங்க டைகர் வேலில, ஒரு டீக்கடை நாப்பது வருக்ஷத்துக்கு முன்னாடி இருந்துது. அங்க தான் அப்போ டூட்டில இருந்த ரேஞ்சருங்க டீ குடிப்பாங்க. அதுவும் பகல்ல தான். டீக்கடைக் காரரை கரடி கொண்ணுடிச்சி. இப்ப அங்க ஒன்னும் இல்ல. சரி நான் கெளம்பணும். ஃபோனை வெக்கிறேன்"

"எங்க போறீங்க சார்?"

"காளின்னு ஒரு யானை. அதை சுடறதுக்கு"






6 comments:

  1. Ippa Dhihil Kadha vera aarambichacha?? Good One!!

    ReplyDelete
  2. Is it real or imagination sir? பயங்கர டெர்ரர் ஆ இருக்கே :)

    ReplyDelete
  3. Sema comedy

    ReplyDelete
  4. அருமை டாக்டர்

    ReplyDelete