இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Saturday, July 20, 2013

டாக்டர்லாம் வேணாம். இந்த தாயத்தைக் கட்டு, சரியாயிடும்

இதுக்கு முன்னாடி வெட்டிப்பந்தல் கிராமத்துல, கிளினிக் வெச்சுருந்தேன். செம பிக்கப். நிறைய பேரு வருவாங்க. கிராமம்கிறதுனால ஃபீஸும் கம்மி, அதோட பாசத்தோட இருப்பாங்க.

அங்க ஒரு பிள்ளையார் சிலை சின்னதா வெச்சிருந்தேன். மெடிக்கல் க்ஷாப் பொண்ணு டெய்லி, புள்ளையாருக்கு பூ வெச்சி விடுவா. விபூதியும் குங்குமமும் இருக்கும்.

ஒரு நாள், ஒரு பேக்ஷன்ட் வந்தாரு.

நான், "வாங்க, உக்காருங்க.. என்ன பண்ணுது?"

"சார், 6 நாளா ஜுரம். நான் போகாத டாக்டர் இல்ல. நீங்க, நான் பாக்குற மூனாவது டாக்டர். ஊசி மாத்திரையெல்லாம் போட்டுப் பாத்தாங்க. சரியாவல. இந்தாங்க டெஸ்ட் ரிப்போர்ட்"

ரிப்போர்ட்டைப் பாத்தா, எல்லாம் நார்மல்.

நான், "தோ பாருங்க, இது மழை சீசன்ல வர சளி, இருமல், ஜுரம் தான். டைஃபாய்டு, மலேரியா இல்ல. ஒரு வாரம் இருக்கும், அப்புறம் சரியாயிடும். வைரல் ஃபீவர். இன்னிக்கு ஆறாவது நாள். நாளைக்கு சரியாயிடும்"

"ஊசி மாத்திரை வேணாமா?"

"வேணாங்க"

"என்ன டாக்டர் நீங்க.... ஊசி மாத்திரை போடலேன்னா எப்படி சரியாவும்?"

"இல்லீங்க. நீங்க முன்னாடி பாத்த டாக்டருங்க நிறைய மாத்திரை கொடுத்துருக்காங்க. அதுவே போதும்"

அவர், இந்த டாக்டர்க் கிட்ட வந்துருக்கோமே?? நமக்கு சரியான மாதிரி தான்!! சரி வந்தது வந்தோம், புள்ளையார் விபூதி வெச்சிக்கிட்டு போவோம்னு, அங்க இருந்த வீபுதிய இட்டுக்கிட்டு போனார்.
-----------------------------------------------------------------------------------------------------
ரெண்டு நாள் கழிச்சு அவர் திரும்பி வந்தார்.

அவர், "வணக்கம் சார்" ன்னார் தெம்பாக.

"வாங்க வணக்கம். ஜூரம் குறைஞ்சுட்டுதா?"

"அட சூப்பராயிட்டேன் சார்".

"நான் தான் சொன்னேன்ல. வைரல் ஃபீவர், ஒரு வாரம் இருக்கும், அப்புறம் சரியாயிடும்னு"

அவர், "வீட்டுக்காரங்களுக்கு காய்ச்சல்....."

"அவங்கள கூட்டிக்கிட்டு வரலயா?"

"இல்ல சார். வீபுதி எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்"ன்னு சொல்லிட்டு, புள்ளையாரைக் கும்பிட்டு, விபூதி பார்சல் எடுத்துக்கிட்டு போயே போய்ட்டார்.
---------------------------------------------------------------------------------------------------
அதுக்கப்புறம் கிளினிக்ல செம கூட்டம். யாருமே என்னப் பாக்க வரல. வந்துட்டு விபூதி எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க. செலவுக்கு ஒரு ருவா இல்ல.
---------------------------------------------------------------------------------------------------
10 நாள் பாத்து வெறுத்துப் போய் புள்ளையார பீரோக்குள்ள வச்சுப் பூட்டிட்டேன்.

ஒரு பேக்ஷன்ட் வந்தார்.

நான், "வாங்க, என்ன பண்ணுது?"

"டாக்டர் விபூதி வாங்க வந்தேன். புள்ளையார் எங்க?"

"புள்ளையார், தும்பிக்கை ஒடஞ்சிதினால, அவரை கடல்ல போட்டாச்சு"

"அய்யய்யோ. இனிம ஒடம்பு சரியில்லன்னா, உங்கள தான் பாக்கணுமா?"ன்னார்.

MBBS படிச்ச நம்மளை இப்படியெல்லாம் பேசுறாங்களேன்னு வேதனை ஆயிடிச்சி.
--------------------------------------------------------------------------------------------------------
பழையபடி கிளினிக் நன்றாக ஒடியது. நான் டெய்லி புள்ளையார கும்பிட்டப் பின்ன தான் பேக்ஷன்ட் பாக்க ஆரம்பிக்கிறது.

திடீர்னு ஒருநாள் நர்ஸ் ஒடி வந்து சொன்னார். "டாக்டர், விக்ஷ்னு மெடிக்கல்ஸ்ல நம்ம புள்ளையார் இருக்காராம். விபூதில்லாம் கொடுக்கறாங்க. வரவழில பாத்தேன். கொஞ்சம் கூட்டமா இருக்கு".

விசாரிச்சதில், விக்ஷ்னு மெடிக்கல் கடை ஒனர், வியாபாரம் சரியில்லனு இப்படி ஒரு ஐடியா போட்டுருக்கார். கடையில ஒரு புள்ளையார் சிலைய வாங்கி, அல்கேட்ஸ் டாக்டர் கிளினிக்ல இருந்த புள்ளையார் இவர் தான்னு புரளிய கெளப்பி விட்ருக்கார். புள்ளையார பாக்குறதுக்கு 5 ருவா, விபூதிக்கு 10, பூவுக்கு 5 ருவா. அடப்பாவி....
----------------------------------------------------------------------------------------------------------
10 நாள் கழிச்சு விக்ஷ்னு மெடிக்கல்ஸ் ஒனர் என்க்கிட்டே வந்தார்.

நான் உள்ளுக்குள் கடுப்புடன், "வாங்க, என்ன விக்ஷயம்?"

"வேலில கிடந்த ஓனானை எடுத்து வேட்டில உட்டுட்டேன் சார்"

நான், "அய்யய்யோ....ஏன் அப்படில்லாம் செய்யறீங்க? கடி பலமா? காமிங்க..."

"சார் அது பழமொழி சார். சூப்பரா ஒரு ஐடியா போட்டு பணம் சம்பாதிக்க ப்ளான் பண்ணினா, அது சொதப்பிருச்சு சார்".

"என்னாச்சு?"

அவர், "இப்போ நம்ம கடைக்கு, புள்ளயார பாக்க மட்டும் தான் வராங்க சார். எவ்வளவு கெஞ்சிப் பாத்தாலும், ஒரு தலைவலி மாத்திரை கூட வாங்க மாட்டேங்கிறாங்க. நாலு லட்ச ருவா ஸ்டாக் முடங்கிடிச்சி சார். இப்போ பக்கத்துல மளிகைக் கடக்காரரும் புள்ளையார் வச்சிட்டார்".

நான், "ஹாஹா. நம்ம வேலை என்னவோ அதை மட்டும் தான் செய்யணும். பிரச்சினைய நான் தீர்த்து வெக்கிறேன். கதை கொடுங்க..............."
---------------------------------------------------------------------------------------------------------
நான் சொன்ன மதிரி, மெடிக்கல் க்ஷாப் ஒனர், புள்ளையாரோட மூஞ்சுறு ஒடஞ்சுதுன்னு சொல்லி கடல்ல போட்டுட்டார். மளிகைக்கடக்காரரையும் அட்ஜஸ்ட் பண்ணியாச்சு.

பழைய படி கிளினிக்கில் பேக்ஷன்ட்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு நாள், அம்மா ஃபோன் பண்ணினாங்க. ஒரே ஜுரமாம். நான் பீரோவைத் திறந்து, விபூதி பார்சல் கட்டினேன்

7 comments:

  1. அருமை...நடப்பு சூழ்நிலையோடு சிரிக்க வைத்தாலும் மெல்லிய வாழ்வியல் வலி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது...

    ReplyDelete
  2. அருமை டாக்டர்...

    -வீரா

    ReplyDelete
  3. அவர், "வீட்டுக்காரங்களுக்கு காய்ச்சல்....."

    "அவங்கள கூட்டிக்கிட்டு வரலயா?"

    "இல்ல சார். வீபுதி எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்"ன்னு சொல்லிட்டு, புள்ளையாரைக் கும்பிட்டு, விபூதி பார்சல் எடுத்துக்கிட்டு போயே போய்ட்டார்.
    ---------------------------------------------------------------------------------------------------
    அதுக்கப்புறம் கிளினிக்ல செம கூட்டம். யாருமே என்னப் பாக்க வரல. வந்துட்டு விபூதி எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க. செலவுக்கு ஒரு ருவா இல்ல.
    ---------------------------------------------------------------------------------------------------
    10 நாள் பாத்து வெறுத்துப் போய் புள்ளையார பீரோக்குள்ள வச்சுப் பூட்டிட்டேன்.

    ROTFL :)

    ReplyDelete
  4. மெல்லிய உளவியல் நகைச்சுவை இழையும் கதை…! மெடிக்கல்காரரும் மளிகைக் கடைக்காரரையும் நினைக்கும்போது பீகாரில் ஃபிரிட்ஜை எக்ஸ்ரே மிஷின் என்று புளுகி ஒரு லேப்காரர் கிராமத்துக்காரர்களிடம் பணம் பிடுங்கிய செய்திதான் நினைவுக்கு வருகிறது…!

    ReplyDelete
  5. Dr. ஒரு சின்ன கரெக்ஷன். நீங்க ஷ(SHA) போட வேண்டிய இடத்தில எல்லாம் க்ஷ(KSHA) போடறீங்க. க்ஷ=க் ஷ.

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சு விட்ருங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடி எழுதினது. அப்பத்தான் தமிழே எழுத ஆரம்பிச்சேன்.

      Delete
  6. உங்களுடைய இந்த நகைச்சுவை உணர்வு தான் உங்களுடைய பலம் என்று தோன்றுகிறது. தொடர்ந்து இப்படியே இருங்க. ஆசிகள்!

    ReplyDelete